ஒவைசியின் பெயர் மறக்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.. அசாம் முதல்வர்

 
ஹிமாந்தா பிஸ்வா சர்மா

இங்கு நிஜாமின் பெயர், ஒவைசியின் பெயர் என்றென்றும் மறக்கப்படும். அந்த நாள் வெகுதொலைவில் இல்லை என்று அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

தெலங்கானா மாநிலம் வாரங்கலில், ஆசிரியர்கள் மற்றும் வேலையற்ற இளைஞர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீ்க்கப்பட்டதுபோல் நிஜாமின் பெயரும், ஒவைசியின் பெயரும் என்றென்றும் மறக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.பாபர், ஔரங்கசீப், நிஜாம் ஆகியோர் நீண்ட காலம் வாழ முடியாது என்று இந்திய வரலாறு கூறுகிறது. நிஜாமின் மரபு முற்றிலும் நிறுத்தப்பட்டு இந்திய நாகரீகத்தின் அடிப்படையில் ஒரு புதிய கலாச்சாரம் உருவாகும் என்று நான் நம்புகிறேன். 

தொழிலாளர்கள் மனிதர்கள் இல்லையா?.. உத்தர பிரதேச அரசை சாடிய அசாதுதீன் ஓவைசி

மக்களின் அன்பும் ஆதரவும் என்னை மீண்டும் ஹைதராபாத் வருவதற்கு தூண்டுகிறது. மாநிலத்தில் பா.ஜ.க. அரசு பதவியேற்றும் 2023ல் மீண்டும் வருவேன். பிரதமர் மோடியின் ஆதரவுடன் புதிய மாநிலம் உருவாக்கப்படும் என்று மக்கள் நம்புகிறார்கள். எனது மாநிலம் ஒரு சிறிய மாநிலம். தெலங்கானாவின் ஜி.டி.பி. ரூ.9 லட்சம் கோடி. ஆனால் தெலங்கானாவை விட நாங்கள் அதிகம் உழைக்கிறோம். தேர்தல் பிரச்சாரத்தின்போது நமது பா.ஜ.க. தலைவர்கள், அசாமில் எங்கள் அரசாங்கம் ஒராண்டில் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு தருவோம் என்று கூறினார்கள். ஆனால் இரண்டு லட்சம் வேலை தருவதாக வாக்குறுதி அளித்த கே.சந்திரசேகர் ராவ் போன்ற மக்கள் தேர்தலுக்கு பின் மறந்து விடுகின்றனர். 

கே.சந்திரசேகர் ராவ்

இன்று நான் கே.சந்திரசேகர் ராவிடம் சொல்கிறேன், மே 1 முதல் மே 10  வரை நான் அசாமில் ஒரு லட்சம் பேருக்கு வேலை கொடுப்பேன் அந்த செய்திகளை அவர் பார்க்க வேண்டும். நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம். எப்போதெல்லாம் ஒரு சர்வாதிகாரி முதலமைச்சரோ, பிரதமரோ ஆகிறாரோ அப்போதெல்லாம் நாட்டில் எமர்ஜென்சி போன்ற சூழல் உருவாகிறது. தொடர்ந்து போராட  வேண்டும். அது புதிய தெலங்கானாவை உருவாக்கும், சர்வாதிகாரம் இங்கு வேலை செய்யாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.