அதுகூட இல்லாதவரிடம் அதைப்போல் கேளு - திமுக ஆத்திரம்

ஆயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் என்று கேட்கும் கும்பலுக்கு, ஆயிரம் ரூபாய் கூட இல்லாதவரிடம் அதை போய் கேளு என்று ஆத்திரப்பட்டிருக்கிறது திமுக .
தகுதி வாய்ந்த இல்லத்தரசிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு இரண்டு சலசலப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஆயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் என்று என்ற சலசலப்பு ஒரு பக்கம் இருக்க , தகுதி வாய்ந்த பெண்களுக்கு மட்டுமே என்பதால் பெரும் சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது .
அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்பது எதிர் கட்சிகளின் வலியுறுத்தலாக இருக்கிறது . இது குறித்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு முரசொலியில் வெளிவந்திருக்கும் தலையங்க கட்டுரையில் , ஒரு கோடி பேருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க அரசு முடிவு எடுத்திருக்கிறது. இதற்காக 7,000 கோடியை நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்று முதல்வர் அறிவித்ததும், அனைவருக்கும் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுகிறது.
மாதம் ஆயிரம் ரூபாய் என்பது யார் யாரின் முகத்தில் எல்லாம் மலர்ச்சியை ஏற்படுத்துமோ அவர்கள் அத்தனை பேருக்கும் இந்தத் திட்டம் பலன் கொடுக்கும் என்று முதல்வர் விளக்கம் அளித்திருக்கிறார்.
ஆயிரக்கணக்கான கேள்விகள் கேட்டாலும் பதில் ஒன்றுதான். மாதம் ஆயிரம் ரூபாய் தங்கள் வாழ்வை சிறிதேனும் மாற்றிவிடும் என்று நம்பும் எந்த குடும்பத் தலைவியையும் இந்த திராவிட மடல் அரசு கைவிட்டு விடாது என்று என்கிறார் முதல்வர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும், இந்தத் திட்டம் பசித்த வயிறுகளுக்கான சோறு தானே தவிர, எல்லாம் சாப்பிட்டவர்களுக்கு தரப்படும் பால் பாயாசம் அல்ல. இது பெண்களுக்கான நன்கொடையோ பாக்கெட் மணியோ, டிப்ஸ் அல்ல . ஏதும் மற்றவர்களுக்கு உதவும் அறம். அந்த அறத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது தான் இந்த திட்டம்.
ஆடுகளை ஓட்டிக்கொண்டு வரும் ஒரு விவசாயி, ஒரே ஒரு ஆட்டை மட்டும் தோளில் தூக்கிப் போட்டு சுமந்து வருவான். அது காலில் அடிபட்டு நடக்க முடியாத ஆடாக இருக்கும் . அதற்கு பெயர் தான் சமூக நீதி என்று சொன்னவர் கலைஞர். அத்தகைய நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது தான் இந்த திட்டம் .
வறுமை ஒழிப்பு திட்டங்கள் முழு பலனை தராமல் போனதற்கு காரணம் வறுமையில் உள்ள மக்களை மட்டுமே இனம் கண்டு அவர்களுக்கு தராமல் போனதுதான். எந்தத் திட்டமாக இருந்தாலும் அந்தத் திட்டம் என்ன நோக்கத்திற்காக கொண்டுவரப்படுகிறது அந்த அடிப்படையிலேயே பயனாளிகளும் தீர்மானிக்கப்படுவார்கள்.
ஆயிரம் ரூபாய் உரிமை தொகை தரப் போகிறது தமிழ்நாடு அரசு என்று ஊடகம் ஒன்று வசதியான பெண்களிடம் கேட்டபோது, இல்லாத ஏழை மக்களுக்கு இது பெரிய உதவியா இருக்கும் என்று தான் சொல்கிறார்கள். யாருக்கு பயனுள்ளது என்பது மக்களுக்கே தெரிகிறது. ஏழை குடும்ப பெண்களின் வருமான அளவை அதிகரிப்பதும் வறுமை விகிதத்தை குறைப்பதும் தான் இந்த திட்டத்தின் நோக்கம். இவ்வளவு விளக்கத்திற்குப் பிறகும் கூட ஒரு கும்பல் கேட்கிறது ஆயிரம் ரூபாயை வைத்து என்ன செய்ய முடியும் என்று. ஆயிரம் ரூபாய் கூட இல்லாதவரிடம் அதை போய் கேள் என்பது தான் ஒரே பதில் என்று நெத்தியடியாக சொல்லி இருக்கிறது முரசொலி.