தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தை மத்திய அரசு குறைக்கிறது.. தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதாவுக்கு ஓவைசி எதிர்ப்பு

 
தேர்தல் ஆணையம்

தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா 2021 கொண்டு வருவதன் மூலம் தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தை மத்திய அரசு குறைக்கும் என்று  அசாதுதீன் ஓவைசி தெரிவித்தார்.

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று அவை நடவடிக்கை தொடங்கியதும், தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2021 மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூவால் தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மசோதா குடிமக்கள் அல்லாதவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை அளிக்கும் என்ற எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில்  தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2021 குறித்து ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி எம்.பி. அசாதுதீன் ஓவைசி கூறியதாவது: இந்த மசோதா உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறுகிறது. மேலும், அரசுக்கு சட்டமியற்றும் தகுதியும் இல்லை. வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைப்பது உச்ச நீதிமன்றத்தின் புதுசாமி தீர்ப்பின் வரையறுக்கப்பட்ட தனியுரிமைக்கான அடிப்படை உரிமையை மீறுகிறது. 

கிரண் ரிஜிஜூ

ஆதார் அங்கீகாரத்தை கட்டாயமாக்குவது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறுவதாகும். குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் சட்டத்தை இயற்றுவதற்கு சபைக்கு தகுதி இல்லை. ஆதார் இந்திய குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல. வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பது முற்றிலும் மாறுபட்ட விஷயம். வாக்காளர் சேர்க்கை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை வழங்குதல் ஆகியவை அரசியலமைப்பு அதிகாரத்தால் அரசியலமைப்பு கடமையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன.

தொழிலாளர்கள் மனிதர்கள் இல்லையா?.. உத்தர பிரதேச அரசை சாடிய அசாதுதீன் ஓவைசி

இந்த மசோதாவை கொண்டு தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தில் அரசாங்கம் தலையிடுகிறது. மேலும் சுயவிபர வாக்காளர்களின் வாக்குரிமையை நீக்குவதற்கும், பல்வேறு அரசு திட்டங்களின் பயனாளிகளுககு இடையே பாகுபாடு காட்டுவதற்கும் அரசாங்கத்தை அனுமதிக்கும். இது புனிதமான வாக்குச் சீட்டு  வயது வந்தோர் வாக்குரிமையின் கொள்கைகளை மீறுவதாகவும் முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.