பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகும் தொழிலதிபர் வீட்டில் ரூ.180 கோடி பணம் எப்படி கிடைத்தது? சொல்லுங்க மோடி.. ஓவைசி

 
தொழிலாளர்கள் மனிதர்கள் இல்லையா?.. உத்தர பிரதேச அரசை சாடிய அசாதுதீன் ஓவைசி தொழிலாளர்கள் மனிதர்கள் இல்லையா?.. உத்தர பிரதேச அரசை சாடிய அசாதுதீன் ஓவைசி

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகும் உத்தர பிரதேசத்தில் உள்ள தொழிலதிபர் வீட்டில் ரூ.180 கோடி பணம் எப்படி கிடைத்தது என்பதை பிரதமர் மோடி சொல்ல வேண்டும்  என்று  அசாதுதீன் ஓவைசி தெரிவித்தார்.

வருமான வரித்துறை, ஜி.எஸ்.டி. தலைமை இயக்குனரக அதிகாரிகள் மற்றும் ஜி.எஸ்.டி. புலானாய்வு துறை ஆகியவை கடந்த வாரம் கான்பூரை சேர்ந்த வாசனை பொருட்கள் விற்பனைசெய்யும் தொழிலதிபர் பியூஷ் ஜெயின் வீட்டில் நடத்திய 120 மணி நேர மெகா ரெய்டில், ரூ.170 கோடி  ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது. மேலும் கிலோ கணக்கில் தங்கம், ஆடம்பர சொத்துக்கள் குறித்த ஆவணங்களும் சிக்கியது.  தொழிலதிபர் பியூஷ் ஜெயின், ரெய்டில் சிக்கிய பண குவியல் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பியூஷ் ஜெயின் வீட்டில் கட்டுக்கட்டாக சிக்கிய பணத்தையும், பணமதிப்பிழப்பு (பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது) நடவடிக்கையும் இணைத்து பிரதமர் மோடியை அசாதுதீன் ஓவைசி தாக்கியுள்ளார். ஹைதராபாத் எம்.பி.யும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவருமான அசாதுதீன் ஓவைசி கூறியதாவது: பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகும் உத்தர பிரதேசத்தில் உள்ள தொழிலதிபர் வீட்டில் ரூ.180 கோடி பணம் எப்படி கிடைத்தது என்பதை பிரதமர் மோடி சொல்ல வேண்டும்? 

பிரதமர் மோடி

பணமதிப்பிழப்பு நடவடிக்கை முற்றிலும் தோல்வியடைந்து, சிறு தொழில்கள் மற்றும் வேலைகளை அழித்து விட்டது என்பதை பிரதமர் மோடி ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி 2016 நவம்பர் 8ம் தேதியன்று, பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். கருப்பு பணம், ஊழலை ஒழிக்கவும், தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். ஆனால் பியூஷ் ஜெயின் போன்றவர்களிடமிருந்து கைப்பற்றப்படும் பணத்தை பார்க்கும்போது, பணமதிப்பிழப்பு நடவடிக்கை எதிர்பார்த்த பலனை கொடுக்கவில்லை என்றே தெரிகிறது.