உ.பி. காவல் நிலைய மரணம்.. மனித வாழ்க்கையின் மதிப்பு மதத்தின் அடிப்படையில் இருக்கும்?.. ஓவைசி கேள்வி

 
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் முதல்வரா? முதல்ல கல்யாணம் நடக்கட்டும் அப்புறம் குழந்தையை பத்தி பேசலாம்…. அசாதுதீன் ஓவைசி கிண்டல்

உத்தர பிரதேசம் கஸ்கஞ்ச் காவல் நிலையத்தில் இளைஞர் மரணம் அடைந்த விவகாரத்தில், மனித வாழ்க்கையின் மதிப்பு மதத்தின் அடிப்படையில் இருக்கும்? என்று பா.ஜ.க. அரசை அசாதுதீன் ஓவைசி கேள்வி கேட்டுள்ளார்.


உத்தர பிரதேசம் கஸ்கஞ்ச் பகுதியை சேர்ந்த ஒருவர் காணாமல் போன மகள் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். தனது புகாரில் அல்டாப் என்பவரது பெயரை குறிப்பிட்டு இருந்தார். இதனையடுத்து அல்டாப் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வரப்பட்டார். விசாரணையின் போது, அல்டாப் கழிவறைக்கு செல்ல வேண்டும் என்று கூறியதையடுத்து அவரை போலீசார் கழிவறைக்கு செல்ல அனுமதித்தனர். கழிவறைக்கு சென்ற அல்டாப் தற்கொலைக்கு முயன்றார் இதனையடுத்து போலீசார் மயக்கநிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சையின்போது அவர் இறந்து விட்டார். அல்டாப் தற்கொலை முயற்சி காரணமாக இறந்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் போலீசார்தான் அல்டாபை கொன்று விட்டனர் என்று அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

உத்தரபிரதேசத்தில் திருமணத்திற்கு தடை; அதிர்ச்சி கிளப்பும் யோகி

இந்நிலையில் அல்டாப் மரணத்துக்கு காரணமான போலீசாரை கைது செய்ய வேண்டும் என்று ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அசாதுதீன் ஓவைசி கூறியதாவது: ஒரு விஷயத்தை சொல்லுங்கள், 4 அடிக்கு குறைவான உயரத்தில் உள்ள தண்ணீர்குழாயில் தன்னுடைய உடைகளை பயன்படுத்தி தற்கொலை செய்து கொள்ள முடியுமா? யாராவது ஒருவர் எப்படி தற்கொலை செய்து கொள்ளமுடியும்? நீங்கள் அவரை கொல்லலாம்? நீங்கள் அவரை நசுக்கலாம்? காவல் நிலையத்தில் பையன் (அல்டாப்) கொலை செய்யப்பட்டான் ஏனென்றால் அவன் ஏழை மற்றும் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவன். 

அகிலேஷ் யாதவ்

மேனிஷ் குப்தா ஜி (பிசினஸ்மேன்) கொரக்பூர் போலீசாரால் கொல்லப்பட்டதுபோது, முதல்வர் யோகி ஆதித்யநாத் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்து ரூ.50 லட்சத்துக்கான செக் கொடுத்தார். அகிலேஷ் யாதவ் ரூ.21 லட்சம் கொடுத்தார். மனித வாழ்க்கையின் மதிப்பு மதத்தின் அடிப்படையில் இருக்கும்? கொரக்பூர் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி இடைநீக்கம் மட்டுமல்ல கைதும் செய்யப்பட்டார். நீங்கள் ஏன் இதை இந்த விவகாரத்தில் செய்யவில்லை? விசாரணை நடத்தவில்லை? சமாஜ்வாடி நற்சான்றிதழ் கொடுத்தது, இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? யார் முட்டாள்தனமாக இருக்கிறார்கள்? அல்டாப் காவல் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.