ஆம் ஆத்மியின் கோவா முதல்வர் வேட்பாளர் யார்?... இன்று அறிவிக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்

 
தேவையில்லாமல் வாய் விட்டு சிங்கப்பூரிடம் வாங்கி கட்டிக்கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால்!

ஆம் ஆத்மியின் கோவா முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அந்த கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவிக்க உள்ளார்.

கோவாவில் 40 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பிப்ரவரி 14ம் தேதியன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் மார்ச் 10ம் தேதி வெளியாகும். கோவா சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாததால் அரசியல் கட்சிகள் அனைத்தும் மிகவும் தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

ஆம் ஆத்மி

குறிப்பாக அந்த மாநிலத்தில் வளர்ந்து வரும் கட்சியான ஆம் ஆத்மி தேர்தல் பணிகளை சுறுசுறுப்பாக மேற்கொண்டு வருகிறது. டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கோவாவில் ஆம் ஆத்மி கட்சிக்காக ஆதரவாக வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்தார். நேற்று ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் முதல்வர் வேட்பாளராக பகவந்த் மான் அறிவிக்கப்பட்டார்.

பக்வந்த் மான்

இதனையடுத்து ஆம் ஆத்மியின் கோவா முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மியின் கோவா முதல்வர் வேட்பாளர் யார் என்பதை இன்று அறிவிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.