பரம்பை கட்சிகள் ஆண்டாண்டு காலமாக ஆட்சி செய்து ஏற்கனவே அரசின் கஜானாவை காலி செய்து விட்டன.. கெஜ்ரிவால்

 
24 மணி நேரத்துல 9 கொலைகள்! போலீஸ் மட்டும் எங்க கையில இருந்தா இது நடக்குமா! பொங்கும் கெஜ்ரிவால்…

பஞ்சாபில் பரம்பை கட்சிகள் ஆண்டாண்டு காலமாக ஆட்சி செய்து ஏற்கனவே அரசின் கஜானாவை காலி செய்து விட்டன என்று பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் வாக்குறுதியை விமர்சனம் செய்த காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம் செய்தார்.


ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அண்மையில் பஞ்சாப் மாநிலத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். அப்போது பஞ்சாபின் மோகாவில்   நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால்  பேசுகையில் கூறியதாவது: 2022ல் பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால், 18 வயதுக்கு மேற்பட்ட பஞ்சாபில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 அவரது வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும். ஒரு குடும்பத்தில் 3 பெண் உறுப்பினர்கள் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் மாதம் தலா ரூ.1,000 டெபாசிட் செய்யப்படும். இது உலகின் மிகப்பெரிய பெண்கள் அதிகாரமளிக்கும் திட்டமாக இருக்கும்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பெண்கள்

அரவிந்த் கெஜ்ரிவாலின் வாக்குறுதியை ஆளும் கட்சியான காங்கிரஸ், அகாலி தளம் மற்றும் பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன. பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கினால் அரசின் கஜானா காலியாகி விடும் என்று குற்றம் சாட்டின. மேலும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்க இது சரியான அணுகுமுறையா என சமூக வலைதளங்களில் சிலர் கேள்வி எழுப்பினர். இதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார்.

காங்கிரஸ்

இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாபி மொழியில் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கினால் அரசாங்க கஜானா காலியாகி விடும் என்று காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் அகாலிதளம் என்னை விமர்சனம் செய்கின்றன.  ஆனால் இந்த பரம்பை கட்சிகள் ஆண்டாண்டு காலமாக ஆட்சி செய்து ஏற்கனவே அரசின் கஜானாவை காலி செய்து விட்டன என்று பேசியிருந்தார்.