பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் மாநிலத்தை செழிப்பாக மாற்றுவோம்.. கெஜ்ரிவால் வாக்குறுதி

 
தேவையில்லாமல் வாய் விட்டு சிங்கப்பூரிடம் வாங்கி கட்டிக்கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால்!

பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் மாநிலத்தை செழிப்பாக மாற்றுவோம் என்று அம்மாநில மக்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்தார்.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று மொஹாலியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியதாவது: பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் பஞ்சாபை செழிப்பாக மாற்றுவோம். வேலைவாய்ப்புக்காக கனடா சென்ற இளைஞர்கள் திரும்பி வருவார்கள். ஆம் ஆத்மி ஆட்சிக்கு வ்ந்தால் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கும், சுகாதாரம் மற்றும் கல்வியில் புரட்சியை ஏற்படுத்தும். அமைதியான பஞ்சாப்பை உருவாக்குவோம். 

ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி அரசாங்கம் விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்தது வணிக சார்பு நிர்வாகத்தை உறுதி செய்யும். பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், மாநிலத்திலிருந்து போதைப்பொருள் கும்பலை ஒழிப்போம், அனைத்து படுகொலை வழக்குகளிலும் நீதியை உறுதி செய்வோம், ஊழலை ஒழிப்போம். நாங்கள் மாநில முழுவதும் 16 ஆயிரம் மொஹல்லா கிளினிக்குகளை அமைத்து ஒவ்வொரு பஞ்சாபிக்கும் இலவசமாக சிகிச்சை அளிப்போம். 

மின்சாரம்

24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்குவோம்.  ஆம் ஆத்மி பஞ்சாபில் ஆட்சி அமைத்தால், மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். சண்டிகரில் நிகழ்சி ஒன்றில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், பிரதமரின் பாதுகாப்பு குளறுபடி ஒரு தீவிரமான பிரச்சினை. பிரதமர் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க காங்கிரஸ் அரசு தவறி விட்டது. பிரதமர் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பை நாங்கள் வழங்குவோம் என்று தெரிவித்தார்.