அதிகாரத் திமிரில் அண்ணாமலை சொன்ன வார்த்தைகள் -கொந்தளிக்கும் பத்திரிகையாளர்கள்
ஒவ்வொரு முறையும் பத்திரிகையாளர்கள் கொந்தளித்து கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தாலும், தொடர்ந்து பத்திரிகையாளர்களை அவமதித்து பேசி வருகிறார் அண்ணாமலை. நேற்றைய தினம் அதிகார திமிரில் அண்ணாமலை சொன்ன வார்த்தைகள் பத்திரிக்கையாளர்களை கொந்தளிக்க வைத்திருக்கின்றன.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று சந்திக்கையாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்போது இந்த சந்திப்பின்போது திமுக சொத்து பட்டியல் வீடியோ வெளியிட்டு விட்டு கேள்வி கேட்கும் முன்பு வெளியேறிய அண்ணாமலையை சுற்றி வளைத்த பத்திரிகையாளர்கள் திமுக தலைவர்கள் மீது அண்ணாமலை சுமத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பாக கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளிக்காத அண்ணாமலை, வாங்குற சம்பளத்துக்கு வேலை செய்யுங்க . சாப்பிடுற சாப்பாடு அப்போதுதான் ஒட்டும் . செய்தியை போடச் சொல்லி நான் கெஞ்சவில்லை. நீங்கள் ஜட்ஜ் கிடையாது மெசஞ்சர். என்னோட நியூஸ் போடலாமா வேண்டாமா என்பது பற்றி உங்கள் எடிட்டர் முடிவு செய்வார் என்று பத்திரிகையாளர்கள் மீது ஆத்திரப்பட்டார்.
அண்ணாமலையின் இந்த செயலுக்கு கடும் அதிருப்தி தெரிவித்து கொந்தளித்து வருகிறார்கள் இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனம். இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் கண்டன அறிக்கையில், ஞாயிறன்று சென்னையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை திமுக தலைவர்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பாக செய்தியாளர் ஒருவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது 2010 கோடி ரூபாய் என்கிற தொகையை சுட்டிக்காட்டியது எந்த அடிப்படையில் ? என்ற கேள்வியை கேட்டு இருக்கிறார்.
இந்த கேள்விக்கு நியாயமாக பதில் சொல்லி இருக்கலாம் . அல்லது கேள்வியை தவிர்த்து இருக்கலாம். ஆனால் அதிகார திமிறில் அண்ணாமலை சொன்ன வார்த்தைகள், வாங்குகிற சம்பளத்துக்கு வேலை செய்யுங்க. சாப்பிடுற சாப்பாடு அப்பத்தான் ஒட்டும். செய்தியை போடச் சொல்லி நான் கெஞ்சவில்லை. இப்படி அவர் ஆத்திரத்தில் உதிர்த்த வார்த்தைகள் பத்திரிகையாளர்களை சிறுமிப்படுத்தும் கேவலமான நோக்கம் கொண்டவை என்கிறது.
மேலும், எங்கிருந்து வரும் இந்த திமிரான வார்த்தைகள்? அதிகார திமிரில் வலம் வந்த பலர் இருக்கின்ற இடமே தெரியாமல் காணாமல் போய்விட்டார்கள். படித்த படிப்புக்கும் கூட நாகரிகம் மரியாதையையும் மனித பண்பையும் அண்ணாமலையிடம் எதிர்பார்ப்பது நமது தவறுதான். அண்ணாமலை அவமானப்படுத்துவதை கண்டுகொள்ள விரும்பாத ஆசிரியர்கள் , ஊடக முதலாளிகள் வெட்கம் கெட்டவர்கள் ஆகிவிட்டார்களோ என்ற கோபம் வருகிறது . பத்திரிக்கையாளர்களை அவமானப்படுத்தும் அண்ணாமலையை தொடர்ந்து கண்டிப்போம். சூடு சொரணை உடன் போராடுவோம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.