எந்த நேரத்திலும் கைது... அதிர்ந்து நிற்கும் சீமான்!

 
sa

தனது கட்சியின் முக்கிய நிர்வாகி எந்த நேரத்திலும் கைது செய்யப்படும் நிலையில் இருப்பதால் அதிர்ந்து நிற்கிறார் சீமான்.

 நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக்.   திமுக அரசின் திட்டங்களையும் திமுகவையும் இவர் தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

i

 கோவை உக்கடத்தில் கடந்த டிசம்பர் 6ஆம் தேதி அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இடும்பாவனம் கார்த்திக் தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக பேசியதாக கூறப்படுகிறது.   இதனால் காவல் உதவி ஆய்வாளர் ரேணுகா தேவி , இடும்பாவனம் கார்த்திக் மீது புகார் அளித்திருக்கிறார்.

 இந்த புகாரின் அடிப்படையில் உக்கடம் போலீசார் இடும்பாவனம் கார்த்திக் மீது தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் விதமாகவும் இரு பிரிவினரிடையே மோதலை தூண்டும் விதமாகவும் உள்ள பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 இதனால் இடும்பாவனம் கார்த்திக் எந்த நேரத்திலும் போலீசாரால் கைது செய்யப்படலாம் என்று நிலை இருக்கிறது .  தனது கட்சியின் முக்கிய நிர்வாகி எந்த நேரத்திலும் கைதாகும் நிலையில் இருப்பது அறிந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிர்ந்த நிற்கிறார் என்று தகவல்.