ஈபிஎஸ்சை கைது பண்ணுங்க சார் - ஓபிஎஸ் வீட்டுக்கு வந்த உதயநிதியிடம் கோரிக்கை

 
so

தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி இபிஎஸ்ஐ கைது பண்ணுங்க சார் என்று ஓபிஎஸ் வீட்டுக்கு வந்த அமைச்சர் உதயநிதியிடம் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்தனர்.  அதற்கு தலையை அசைத்தபடியே அமைதியாக சென்றார் உதயநிதி ஸ்டாலின்.

 முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தாயார் பழனியம்மாள் அண்மையில் மறைந்ததை முன்னிட்டு சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்திற்கு இன்று முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.  அவருடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  அமைச்சர் பி .கே. சேகர் பாபு ஆகியோரும் சென்று இருந்தனர். 

os

 இந்த சந்திப்பின்போது மூத்த அரசியல்வாதி பண்ருட்டி ராமச்சந்திரன்,  ஓபிஎஸ் மகன்,  மனோஜ் பாண்டியன் ஆகியோரும் உடன் இருந்தனர் . இந்த சந்திப்புக்கு பின்னர் வெளியே வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பார்த்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர்,   ’’இவர் எங்க தொகுதி எம்எல்ஏ ’’என்று முழக்கமிட்டார்கள்.

 ஒரு சிலர் அவரை சூழ்ந்து கொண்டு,  ’’சுமத்திரா தீவை தாக்கிய மிகப்பெரிய  சுனாமி மாதிரி இபிஎஸ் .  நீங்கள் தேர்தலில்  அளித்த வாக்குறுதிப்படி கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி கைது செய்யுங்க சார்.  என்று அந்த கோரிக்கையை இப்போது நிறைவேற்றுங்கள் சார்’’ என்று கோரிக்கை வைத்தனர்.  அதற்கு தலையை ஆட்டியபடியே அமைதியாக நகர்ந்தார் அமைச்சர் உதயநிதி .

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எதிர்க்கட்சிகள் எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றம் சுமத்தி வரும் நிலையில்,  ஓபிஎஸ் ஆதரவாளர்களும் இபிஎஸ் மீது தான் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.  இந்த நிலையில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் இபிஎஸ்ஐ கைது செய்ய வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் இடம் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நேரில் கோரிக்கை வைத்திருப்பது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.