காந்தி அல்ல.. நேதாஜியின் செயல்பாடுகள்தான் நாட்டுக்கு சுதந்திரத்தை கொடுத்தது.. அர்தேந்து போஸ் தகவல்

 
நேதாஜி

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது காந்தியின் அமைதி இயக்கத்தால் அல்ல. ஆசாத் ஹிந்த் பவுஜ் மற்றும் நேதாஜியின் செயல்பாடுகள் இந்த நாட்டுக்கு சுதந்திரத்தை கொண்டு வந்தன என அர்தேந்து போஸ் தெரிவித்தார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மருமகன் அர்தேந்து போஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது காந்தியின் அமைதி இயக்கத்தால் அல்ல. ஆசாத் ஹிந்த் பவுஜ் மற்றும் நேதாஜியின் செயல்பாடுகள் இந்த நாட்டுக்கு சுதந்திரத்தை கொண்டு வந்தன.

அர்தேந்து போஸ்

அதை அப்போதைய இங்கிலாந்து பிரதமர் கிளமெண்ட் ரிச்சர்ட்  அட்லியும் ஒப்புக்கொண்டார். நேதாஜி மற்றும் ஜவஹர்லால் நேரு இடையே நிறைய உரசல் இருந்தது. வெளிப்படையாக ஒரு போட்டி. எனவே, வரலாற்றின் மறுபக்கத்தில் நேதாஜியை வைக்க முடிவு செய்யப்பட்டது. வரலாற்று புத்தகங்களில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை பற்றி அதிகம் எழுதப்படவில்லை. 

நேரு

அவரை பற்றியும், ஹிந்த் பவுஜ் பற்றி இன்றைய இளைஞர்களுக்கு அதிகம் தெரியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். அதேசமயம் இந்திய விடுதலை போராட்ட வீரர் சுபாஸ் சந்திர போஸ் பிறந்தநாளையும் சேர்த்து குடியரசு தினவிழாவை கொண்டாடும் நோக்கில், மத்திய அரசு அண்மையில், இந்த ஆண்டு முதல் குடியரசு தினவிழா கொண்டாட்டம் ஜனவரி 24ம் தேதிக்கு பதில் 23ம் தேதி தொடங்கி கொண்டாடப்படும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.