முஸ்லிம்களுக்கு பா.ஜ.க.வில் இடமில்லை என மக்களை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துகின்றனர்.. ஹைதர் அலி கான்

 
ஹைதர் அலி கான்

முஸ்லிம்களுக்கு பா.ஜ.க.வில் இடமில்லை என்று மக்களை எதிர்க்கட்சி தலைவர்கள் தவறாக வழிநடத்துவதாக ஹைதர் அலி கான் குற்றம் சாட்டினார்

எதிர்வரும் உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில்  பா.ஜ.க., அப்னா தளம் மற்றும் நிஷாத்  ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.  சுவார்  சட்டப்பேரவை தொகுதியில் அப்னா தளம் கட்சி வேட்பாளராக களம் இறங்குபவர் ஹைதர் அலி கான். முஸ்லிம்களுக்கு பா.ஜ.க.வில் இடமில்லை என்று மக்களை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துவதாக ஹைதர் அலி கான் குற்றம் சாட்டியுள்ளார்.

பா.ஜ.க.-அப்னா தளம்

ஹைதர் அலி கான் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: என்னை நம்பி வாய்ப்பு கொடுத்த பா.ஜ.க.வுக்கு நன்றி. கடவுள் விரும்பினால் நான் இந்த தொகுதியில் வெற்றி பெறுவேன். பா.ஜ.க.வில் முஸ்லிம்களுக்கு இடமில்லை என்று எதிர்க்கட்சி தலைவர்கள் பொதுமக்களை தவறாக வழிநடத்துகிறார்கள். தலித், முஸ்லிம் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் யார் சரி, யார் தவறு என்பதை புரிந்து கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பா.ஜ.க.

பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான அப்னா தளம், 2014 முதல் இதுவரையிலான காலத்தில் தற்போதுதான் முதல்முறையாக முஸ்லிம் ஒருவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உத்தர பிரதேசத்தில் பிப்ரவரி 10ம் தேதி முதல் மொத்தம் 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 10ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்.