பா.ஜ.கவில் இணைந்த சகோதரனின் மனைவி... வாழ்த்து சொன்ன அகிலேஷ் யாதவ்

 
அபர்ணா யாதவ்

உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க.வில் இணைந்த தனது சகோதரனின் மனைவிக்கு சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் வாழ்த்து தெரிவித்தார்.


எதிர்வரும் உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு கடும் போட்டியாக அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி இருக்கும் என பரவலாக கருதப்படுகிறது. அதற்கேற்ப அகிலேஷ் யாதவும், சமாஜ்வாடி கட்சியினரும் தேர்தல் பிரச்சார பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.  எதிர்வரும் உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் அகிலேஷ் யாதவ் போட்டியிடுவாரா என்பது குறித்து பல்வேறு ஊக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

அகிலேஷ் யாதவ்

இது ஒரு புறம் இருக்க, சமாஜ்வாடி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவின் இளைய மருமகள் அபர்ணா யாதவ் நேற்று பா.ஜ.க.வில் இணைந்தார். இது சமாஜ்வாடி கட்சிக்கு பெரும் அடியாக கருதப்படுகிறது. இந்நிலையில் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ்  செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: அசம்கர் மக்களிடம் அனுமதி பெற்ற தேர்தலில் போட்டியிடுவேன். ஆனால் நான் போட்டியிட்டால் அசம்கரில் மட்டுமே போட்டியிடுவேன்.

ரவுடி விகாஸ் துபே மனைவி எங்க கட்சி உறுப்பினரே கிடையாது.. அலறும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி..

நான் அவளை (அபர்ணா யாதவ்) வாழ்த்துகிறேன். சமாஜ்வாடி சித்தாந்தம் மற்ற கட்சிகளுக்கும் பரவி வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நேதாஜி (முலாயம் சிங் யாதவ்) பா.ஜ.க.வில் சேருவதற்கு எதிராக அவளை (அபர்ணா யாதவ்) சமாதானப்படுத்த அவர் நிறைய முயற்சி செய்தார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.