அதிமுகவில் இணைய காத்திருக்கிறேன் - அன்வர் ராஜா

 
anwar

இன்று காலை இமானுவேல் சேகரனின் 65 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சொந்த ஊரான செல்லூர் கிராமத்தினர் அஞ்சலி செலுத்தினார்கள் இதனை தெடர்ந்து இமானுவேல் சேகரனின் மகள் பிரபாராணி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Sasikala, AIADMK leaders should work together: Ex MP Anwar Raja

நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சுமார் 6000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பரமக்குடி நகர் முழுவதும் 145 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 40 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஏடிஜிபி தலைமையில் ஒரு ஐஜி, 3 மூன்று டிஐஜி, 34 காவல் கண்காணிப்பாளர்கள், 24 ஏடிஎஸ்பி, 210 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 100 காவல் ஆய்வாளர்கள், 300 சார்பு ஆய்வாளர்கள் மற்றும் 550 சிறப்பு காவல் படை பிரிவினர் உள்ளிட்ட 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் பிரிவு போலீசார் பரமக்குடி பேருந்து நிலையம், ஐந்து முனை, நினைவிடம் என முக்கிய பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். 

அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “அதிமுக எழுச்சியுடன் மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். இபிஎஸ் -ஓபிஎஸ் இணைந்திருந்த போது என்னை கட்சியில் இருந்து நீக்கினார்கள். மீண்டும் இணைந்தால் தான் என்னை கட்சியில் சேர்க்க முடியும். கட்சியில் இணைவதற்காக காத்திருக்கிறேன். அதிமுகவினரை இணைக்கவும் தயார். அதில் இணையவும் காத்திருக்கிறேன். தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு பொதுமக்களை பாதிக்கிறது. அதிமுக நிறுவன தலைவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். ஒரு அவதாரம். அவரின் பக்தனாக தொடர்கிறேன்” எனக் கூறினார்.