அண்ணாமலை இன்னும் கைது செய்யப்படாதது ஜனநாயக விரோதம் - காயத்ரி ஆத்திரம்

 
gyy

திமுக அரசினையும் முதல்வர் ஸ்டாலினையும்  விமர்சித்ததால் அண்ணாமலை மீது கடும் ஆத்திரப்பட்டிருக்கிறார் காயத்ரி ரகுராம். அண்ணாமலை இன்னும் கைது செய்யப்படாதது ஜனநாயக விரோதம் என்கிறார்.

 தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது ஏற்றுக்கொள்ளக்கூடியது இல்லை என்று அரசியல் கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர் . தமிழக அரசின் இந்த அறிவிப்பை கிண்டலடிக்கும் விதமாக நடிகர்கள் கவுண்டமணி -செந்தில் நடித்த படத்தின் காமெடி காட்சிகளோடு ஒப்பிட்டு சவுக்கு சங்கரின் ஆதரவாளரும் வாய்ஸ் ஆப் சவுக்கு சங்கர் என்ற டுவிட்டர் தளத்தில் அக்கவுண்டை வைத்திருக்கும் பிரதீப் வெளியிட்டு இருந்தார்.

g

 இதை அடுத்து நேற்று நள்ளிரவு பிரதீப் கைது செய்யப்பட்டுள்ளார்.  இந்த கைது நடவடிக்கைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.  அவர்,  ’’ஒரு ட்ரோல் வீடியோவை வெளியிடுவதற்கு  கைது நடவடிக்கை என்றால், ஒட்டுமொத்த திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினரும் சிறையில் இருக்க வேண்டும். ஏனெனில் இதுதானே அவர்களின் முழுநேர தொழில்.  ஒரு சின்ன விமர்சனத்திற்கே அரசு திகைத்து நிற்கிறது.  கருத்து சுதந்திரைத்தை தடுப்பது, நள்ளிரவு கைதுகள் மூலம் ஒரு பாசிசவாதியின் உண்மையான குணாதிசயங்கள் கொண்டவராக இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.  ஒட்டுமொத்த  அதிகாரங்களும் ஒரு குடும்பத்திற்குள் குவிந்தால் ஜனநாயகம் எதேச்சதிகாரமாக மாறி, எந்த நேரத்திலும் சர்வாதிகார அரசாக மாறும்’’ என்று ஆத்திரப்பட்டிருக்கிறார் அண்ணாமலை.

இதற்கு நடிகை காயத்ரி ரகுராம்,  ‘’அண்ணாமலைக்கு வார்ரூம் சிக்கல். அது ஜனநாயகம் அல்ல.. எல்லை மீறும் மற்றவர்களை இழிவுபடுத்தும் குழு என்று அழைக்கப்படுகிறது. பெண்களுக்கு ₹1000 அறிவித்த பிறகு வயிறு எரிகிறது. அண்ணாமலை நீங்கள் தாமதத்திற்கு ₹29,000 பெண்களுக்கு கேட்டீர்கள். ஏழைப் பெண்மணிகளுக்கு போலி ஆருத்ரா தங்கப் நிறுவனத்தின் பணத்தை வட்டியுடன் திருப்பிக் கொடுங்கள்’’ என்கிறார்.

gr

அவர் மேலும்,  ‘’அண்ணாமலை அவரது ஹனி ட்ராப்க்காகவும், வெறுப்பை பரப்பியதற்காகவும், பிறர் மீது அவதூறாக பொய்களை பரப்புவதற்காகவும் இன்னும் கைது செய்யப்படாதது ஜனநாயக விரோதமானது. (உதாரணம் லாவண்யா பிரச்சினை, ஸ்ரீமதி பிரச்சினை, பீகார் தொழிலாளர், ஹரிஷ் போன்ற குற்றவாளிகளை காப்பாற்றுகிறார்). வார்ரூம் தொற்று, குண்டர்கள் மற்றும் அடியாட்களுக்கு மட்டுமே அவர் அதிகாரம் கொடுக்கிறார்’’என்கிறார்.