“கும்மிடிப்பூண்டியைத் தாண்டாத ஸ்டாலின் தேசிய தலைவரா?”- அண்ணாமலை

 
அண்ணாமலை  ஸ்டாலின்

கும்மிடிப்பூண்டியைத் தாண்டாத ஸ்டாலின் தேசிய தலைவரா? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 

Annamalai

இதுதொடர்பாக அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில், “அரவிந்த் கெஜ்ரிவால் கூட, வேறு மாநில தேர்தல்களில் நின்று பார்த்துவிட்டு, தற்போது டெல்லியோடு ஒதுங்குகிறார். ஆனால், "நான் ஏற்கெனவே தேசிய அரசியலில் இருக்கிறேன்" என்று சொல்கிற முதலமைச்சர் ஸ்டாலின், கும்மிடிப்பூண்டியையே தாண்டாதவர். மம்தாவின் பதவியேற்பு விழாவுக்கு சென்று பேசிவிட்டால் அது தேசிய அரசியலாகுமா? அதனால், தமிழகத்திலிருந்து யாராவது தேசிய அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னால் அது பகல் கனவாகத்தான் முடியும்..! 

திமுக மற்ற மாநிலங்களில் தனது கிளைகளை தொடங்கி, அங்கு நடைபெறும் தேர்தலில் 1% ஓட்டையாவது வாங்கிவிட்டு, 'தேசிய அரசியலில் வந்துவிட்டோம்' என்று சொல்லட்டும்! பா.ஜ.க வித்தியாசமான கட்சி. எங்களோடு வந்து பார்த்தால்தான் திருமாவளவன் அவர்களுக்கு தெரியும். எப்போதும் அந்தப் பக்கமே நாற்காலியைப் போட்டு அமர்ந்திருப்பதால், பாஜக வின் மகிமை சில நேரங்களில் அவருக்கு தெரிவதில்லை. 

பாஜக மிக வேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது. அடுத்தகட்டத்துக்கு சென்றிருக்கிறது. குறிப்பாக, உள்கட்டமைப்புகளை வைத்து இங்கு அரசியல் நடப்பதே கிடையாது. சாதியைச் சார்ந்துதான் இங்கு அரசியலே நடந்திருக்கிறது. அதை பாஜக உடைத்து கொண்டிருக்கிறது, திமுக மீது மக்களுக்கு அதிருப்தி இருக்கிறது. 2024 வரை வேறெந்த இடைத்தேர்தலும் வரக் கூடாது. அனைத்து எம்.எல்.ஏ க்களும் உடல் ஆரோக்கியத்துடன் நன்றாக இருக்க வேண்டும்.திரிபுரா, நாகாலாந்தில் பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடியே காரணம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.