“கனிமொழி பாஜகவில் இணைந்தால் நான் பதவி விலகுகிறேன்”- அண்ணாமலை

 
கனிமொழி அண்ணாமலை

கனிமொழி பாஜகவில் இணைந்தால் நான் பதவி விலகுகிறேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கட்சி தேர்தல் முறைப்படி நடந்தால் கனிமொழிதான் தலைவர்” - அண்ணாமலை | nakkheeran

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, “கனிமொழிக்கு என்ன தகுதி இருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவ்வப்போது ஒரு கேள்வி கேட்பார்.  இரண்டாவது முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக தற்போது அவருக்கு பதில் சொல்கிறேன்.  இந்த தகுதி கூட இல்லாத ஒரு நபர் பாஜகவிற்கு தலைவராக நீடிப்பது அந்த கட்சிக்கு நல்லதல்ல” எனக் கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “என் அப்பா முதலமைச்சரோ, எம்.எல்.ஏ.வோ இல்லை. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும் இல்லை. என் ப்பா குப்புசாமி. ஆடு, மாடு மேய்த்து விவசாயம் செய்பவர். பொறுமையாக செல் என்று தான் எனக்கு கூறியுள்ளார். நான் வெற்றி பெற சில ஆண்டுகள் ஆகலாம். ஒருவேளை கனிமொழி பாஜகவில் இணைந்தால் நான் பதவி விலகுவது குறித்து பரிசீலனை செய்கிறேன்” எனக் கூறியுள்ளார்.