தமிழக முதல்வர் வேட்பாளராக ராகுல் களமிறங்கவுள்ளார் - அண்ணாமலை

 
Annamalai

நாளை நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

மதுரை: `தனிமனித சுதந்திரத்தைப் பாதுகாக்கும் கட்சி பாஜக; ஒட்டுக்கேட்பு  என்பது பொய் செய்தி! - அண்ணாமலை | Bjp party state leader annamalai press meet  at Madurai

சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் பிப் 1 , 2022 ல் பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பிவிட்டார். பிப் 3 ல் ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு வெளியிட்ட பிறகுதான் இந்த விசயம் தெரிய வந்தது. நீட் மசோதா குறித்த புரிதல் இல்லாத ஆளுங்கட்சி, பொய் பரப்பி பாஜக மீது தவறான பிம்பத்தை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே செப் 18 , 2017 ல் அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ் மூலம் அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதா குடியரசு தலைவரால் புறக்கணிக்கப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாவை புறக்கணிக்க கூறியுள்ள காரணத்தை மாநில அரசு தெளிவாக கூறவில்லை. 2014 பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மருத்துவ இடங்கள் 84% அதிகரித்துள்ளது. தமிழக மருத்துவ கல்லூரி இடங்கள் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.

ஏ.கே.ராஜன் கமிட்டி குறித்த ஆளுநர் பதிலை தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். நாளை நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது. ஆளுநர் கேள்விக்கு முழு பதிலை தமிழக அரசு அளித்த பிறகு அனைத்து கட்சி கூட்டம் கூட்டம் நடத்தினால் பாஜக முதல் கட்சியாக பங்கேற்கும். அடுத்த தேர்தலில் ராகுல்காந்தி தமிழகத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அதனால்தான் நாடாளுமன்றத்தில் தமிழகம் பற்றி பேசியுள்ளார். ராகுல் ஜாதகப்படி அவர் சொல்வதற்கு எதிராகவே நடக்கும்.12 முதல்வருக்கு தமிழக முதலமைச்சர் நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து கடிதம் எழுதினார், யாராவது ஒருவர் மதித்து பதிலளித்தார்களா?” எனக் கூறினார்.