ஓபிஎஸ்சிடம் மனம் திறந்த அண்ணாமலை

 
o

அதிமுகவுக்கும் பாஜகவுக்குமான மோதல் வலுத்து வருகிறது.  இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை .   

ஓபிஎஸ் தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக அண்ணாமலை சென்றிருந்தாலும் கூட தற்போதைய சூழலில் ஓபிஎஸ் உடன் ஆன இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே  பார்க்கப்படுகிறது.

a

 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக தான் போட்டியிட வேண்டும் என்கிற முடிவில் இருந்திருக்கிறார் அண்ணாமலை .  ஆனால் அதை உடைத்து அவரின் எண்ணத்தை நிறைவேற்ற விடாமல் முன்கூட்டியே அதிமுக வேட்பாளரை அறிவித்துவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி என்கிறார்கள்.   இதனால் வேறு வழியில்லாமல் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார் அண்ணாமலை .  

பாஜகவின் முடிவுக்காக அதிமுக  காத்திருக்கட்டும்.  காத்திருப்பதில் ஒன்றும் தவறவில்லை தவறில்லை என்று பாஜக நிர்வாகி ஆணவத்துடன் சொன்னதற்கு பதிலடியாகவே எடப்பாடி பழனிச்சாமி இதை செய்திருக்கிறார் என்கிறார்கள்.   இதன் பின்னர் அந்த இடைத்தேர்தலில் அதிமுக  தோல்வி அடைந்ததும்   எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் .  அதிமுகவின் தொடர் தோல்விக்கு அவர்தான் காரணம் என்று பலரும் வசை பாடி வருகின்றனர்.

c

 இந்த நிலையில் அண்ணாமலையின் அதிரடியான சில நடவடிக்கைகளால் பாஜகவில் இருந்து பலரும் வெளியேறி வருகின்றனர்.  அந்த வகையில் காயத்ரி ரகுராமை அடுத்து தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்பத் துறை தலைவராக இருந்த நிர்மல் குமார் வெளியேறினார்.  அவர் வெளியேறியதுமே நேராக சென்று எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து அதிமுகவில் இணைந்து விட்டார்.   இதை அடுத்து பாஜகவின் செயலாளர் விலகி அதிமுகவில் இணைந்து விட்டார் . அடுத்தடுத்த இந்த அதிரடிகளால் அதிர்ந்து போய் இருக்கிறார் அண்ணாமலை. 

 இதனால் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் எடப்பாடியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.  அவரின் உருவ பொம்மைகளை, படங்களை எரித்து வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவில் இருந்து யாரையும் அழைக்கவில்லை . பாஜகவில் இருந்து விலகிய பின்னர் அதிமுகவில் சேர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தவர்களை மட்டுமே அவர் சேர்த்துக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.   ஆனாலும் பாஜகவில் இருந்து வெளியேறியர்களை எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் சேர்த்துக் கொண்டதால் அவர் மீது ஆத்திரத்தை காட்டி அவரது உருவ பொம்மைகளை  பாஜகவினர் எரித்து வருகின்றனர்.  பதிலுக்கு  அண்ணாமலையின் உருவ பொம்மை,  புகைப்படங்களை அதிமுகவினர் எரித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

b

 அதிமுகவுக்கும் பாஜகவுமான இந்த மோதலை பார்க்கும்போது வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்த கூட்டணி பிளவுபடும் என்று தெரிகிறது.   இந்த நிலையில் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்தை தேனியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசி உள்ளார் அண்ணாமலை .  கடந்த 24ஆம் தேதி அன்று பன்னீர்செல்வத்தின் தாயார் மறைந்தார்.   அவரது இறப்புக்கு பலரும் அப்போது இரங்கல் தெரிவித்து இருந்தனர் .  இடைத்தேர்தல் நேரம் என்பதால் பலரும் நேரில் அப்போது செல்லவில்லை.  பன்னீர்செல்வத்தின் தாயாரின் பழனியம்மாள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வந்தது குறித்து அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில்,  ‘’தமிழக முன்னாள் முதலமைச்சர், அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் இல்லத்திற்குச் சென்று, அவரது தாயார் பழனியம்மாள் அவர்கள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டேன்.   இந்தப் பேரிழப்பைத் தாங்கும் மன வலிமையை அண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் பெற இறைவனை வேண்டுகிறேன்.   தாயாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.  ஓம் சாந்தி’’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

an

இன்று  பன்னீர் செல்வத்தின் தாயாரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி விட்டு அதன் பின்னர் பன்னீர் செல்வத்திடம் தாயின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து விட்டு மேலும் அரசியல் தொடர்பாகவும் மனம் திறந்து பேசி இருக்கிறார் அண்ணாமலை என்கிறார்கள் .