தமிழகத்தில் பாஜகவால் வளர முடியாதது ஏன்? அமித்ஷாவிடம் புட்டு புட்டு வைத்த அண்ணாமலை!
ராஜினாமா குறித்து டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அண்ணாமலை சந்தித்து பேசினார்.

மத்திய உள்துறை அமைச்சரை அமித்ஷாவை அண்ணாமலை சந்தித்து கட்சியிலிருந்து ஏன் விலகுகிறேன் என விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். எதற்காக தமிழகத்தில் பாஜகவால் வளர முடியவில்லை என்பதற்கான காரணத்தையும் கூறியிருக்கிறார். தமிழகத்தில் பாஜகவில் நிலவும் உள்கட்சி பிரச்சனைகள் குறித்தும் விவரமாக கூறி இருக்கிறார். நம் மத்தியில் ஆட்சியில் இருந்தும் வட மாநிலத்தில் மற்றும் நம்மால் வெற்றி பெற முடிகிறது, தமிழகத்தில் பெற முடியவில்லை என கேட்டு இருக்கிறார் அமித்ஷா. அதற்கான முழு விவரத்தையும் அண்ணாமலை கூறியிருக்கிறார். அனைத்தையும் மத்திய உள்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. தனியே கட்சி ஆரம்பித்தாலும் பாஜகவுடன் நல்ல நட்பு ரீதியில் தான் இருப்பேன் என அண்ணாமலை கூறியிருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் சட்டமன்ற தேர்தலிலும் எவ்வாறு வாக்குகள் உயர்ந்தது குறைந்தது என்பன விளக்கமான உரையை அமித்ஷாவிடம் கூறியிருக்கிறார்.
அனைத்தையும் அமைதியாக கேட்ட அமித்ஷா, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை டெல்லி வரும்படி அழைத்துள்ளடாக கூறப்படுகிறது. அண்ணாமலை சந்திப்பை அடுத்து இன்றிரவு அல்லது நாளை நயினார் நாகேந்திரன் அமித்ஷாவை சந்திக்க வாய்ப்புள்ளது.

