பிஞ்சிலேயே வெம்பிய காய் அண்ணாமலை! திமுக பதிலடி

 
aன்

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் பிறந்த நாள் விழா கூட்டத்தை பிரமாண்டமாக நடத்தியது திமுக.   இந்த பிறந்த நாள் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் பேச்சு குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.  

 சென்னையில் நடந்த தன்னோட பிறந்த நாள் விழா கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் தான் தேசிய அரசியலுக்கு வந்து விட்டதாக தெரிவித்திருக்கிறார்.  நிதீஷ் குமார் ,அரவிந்த் கெஜ்ரிவால், சந்திரசேகர ராவ் போன்றவர்கள் தேசிய அரசியலுக்கு வந்தவர்கள்.   திமுக எப்போது தேசிய அரசியலுக்கு வந்தது? மம்தா பானர்ஜியின் கூட்டத்திலும் டெல்லியிலும் பேசினால் அது தேசிய அரசியலா?  தமிழகத்தில் கும்மிடிப்பூண்டியை தாண்டி தேர்தலில் போட்டியிடாத திமுக தேசிய அரசியலில் ஈடுபடுவதாக சொல்வது வேடிக்கையானது என்று கடுமையாக தாக்கி இருந்தார்.

k

 மேலும் சென்னையில் நடந்த அந்த முதல்வர் பிறந்த நாள் கூட்டத்திற்கு ராகுலும் சோனியாவும் வந்திருக்கலாம்.  ஆனால் ஜம்மு காஷ்மீரில் அரசியல் செல்வாக்கை இழந்த முன்னாள் முதல்வர் பரூக்அப்துல்லா,  தற்போது தான் அரசியலுக்கு வந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே,  ராய்ப்பூர் சென்ற போது அவரது கட்சியினரே அவருக்கு புரியாதை மறு மரியாதை அளிக்கவில்லை.   ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் ஜேஜேஸ்வி யாதவ் ,   இதுபோன்ற விலைக்கு போகாத கத்தரிக்காய்களை கொண்டு வந்து பிறந்தநாள் விழா மேடையில் ஏற்றி முதல்வரை மார்க்கெட் பண்ணுகிறார்கள். 

 கடுமையான வார்த்தைகளில் பயன்படுத்தினாலும் கூட தமிழக மக்களை ஏமாற்ற நினைக்கின்றார்கள்.   அதனால் எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கிறது என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதஸ் முரசொலியில்,  பட்டிக்காடும் பட்டணமும் என்ற தலைப்பில் என்ற பகுதியில பதிலடி கொடுக்கப்பட்டிருக்கிறது .  பட்டிக்காடு: ஏன் தம்பி மல்லிகார்ஜுன கார்க்கே பரூக் அப்துல்லா,  தேஜஸ்வி யாதவ் ,அகிலேஷ் யாதவ் ஆகிய தலைவர்களை விலை போகாத கத்தரிக்காய்கள் என்று மாநில பாஜக தலைவர் கூறியிருக்கிறார்.,

 பட்டணம்:  ஆமாம் ஐயா அந்த நாள் வரும் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் மதச்சார்பின்மை, சமூக நீதி சமத்துவம் ஆகிய உயரிய லட்சியங்களை எழுதி பிடிப்பவர்கள். அதன் காரணமாக தான் அவர்களைப் பார்த்து விலை போகாத கத்தரிக்காய் என்று எரிச்சலில் கூறியிருக்கிறார்.   விலை போகிறதா இல்லையா என்பதை அங்காடிதான் முடிவு செய்யும். அண்ணாமலை முடிவு செய்ய முடியாது என்று ஆத்திரப்பட்ட் அண்ணாமலை பிஞ்சிலேயே பழுத்து வெம்பிய காய்.   அவர் பேசுவது எல்லாம் அவரது கட்சியினருக்கு எட்டிக்காய் . பேராசைக்காரனை சுட்டிக்காட்டும் மரத்தில் இருக்கும் பலாக்காயை விட கையில் இருக்கும் கலாக்காய் மேல் என்ற பழமொழியை நினைவு  நினைவு கொள்வது அவருக்கு நல்லது.