மத்திய அமைச்சராகிறாரா அண்ணாமலை?

 
அண்ணாமலை

மோடியின் புதிய அமைச்சரவை பட்டியலில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் பெயரும் பரிசீலிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அமைச்சராகிறாரா அண்ணாமலை?

அண்ணாமலை மத்திய அமைச்சரானால் தமிழக பா.ஜ.க. தலைவரை மாற்ற அக்கட்சி திட்டமிட்டுள்ளது. பா.ஜ.க.வில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற விதி இருப்பதால், மத்திய அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு மாநில தலைவர் பொறுப்பில் தொடர வாய்ப்பு குறைவாகும். தமிழக மாநில தலைவர் பதவிக்கு தமிழிசை, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், பேராசிரியர் சீனிவாசன் ஆகியோர் பெயர்களும் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்ணாமலை மீது பல்வேறு எதிர்மறை விமர்சனங்கள் தினம் தினம் வந்துகொண்டே இருக்கின்றன. அண்ணாமலையால் காயத்ரி ரகுராம், எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து வெளியேறியுள்ளனர். அண்ணாமலை யாரையும் வளரவிட மாட்டார் என அக்கட்சி நிர்வாகிகளே பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்து வரும் வேளையில் மோடியின் புதிய அமைச்சரவை பட்டியலில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் பெயரும் பரிசீலிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.