துரைமுருகன் மூலம் திருமாவை சரிக்கட்ட நினைக்கும் அன்புமணி

 
வ்

திமுக கூட்டணியில் சேர வேண்டும் என்பதற்காக துரைமுருகன் மூலமாக திருமாவளவனை சரிக்கட்டும் முயற்சியில் இருக்கிறார் அன்புமணி ராமதாஸ்.

 கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதே திமுக கூட்டணியில் பாமகவை சேர்க்க ஸ்டாலின் விரும்பி இருக்கிறார்.  ஆனால் பாமக அதிமுக கூட்டணியில் உறுதியாக இருந்து விட்டது .  திமுக கூட்டணிக்கு போவதற்கான பேரம் கூட கடைசி வரைக்கும் நடந்தன.  ஆனால் அந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக கடையிசில் அக்கூட்டணியிலேயே இருந்துவிட்டது.  எடப்பாடி பழனிச்சாமி இடஒதுக்கீடு அறிவித்ததுதான் அதற்கு காரணம் என்று அப்போது சொல்லப்பட்டது.

ஹ்ச்

அந்தத் தேர்தலில் அதிமுக தோல்வியுற்றது. தேர்தலில் வென்ற திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து திமுக கூட்டணியில் இணைய பாமக விருப்பம் தெரிவித்து வருகிறது. திமுகவும் தங்கள் கூட்டணியில் பாமக இணைய விருப்பம் தெரிவித்து வருகிறது.   ஆனால் திமுக கூட்டணியில் பாமக இணைந்தால் திருமாவளவன் கூட்டணியை விட்டு விலகி விடுவார் என்ற நிலை இருக்கிறது .

பாமகவும் பாஜகவும் இருக்கும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இருக்காது என்று உறுதியாக கூறி வருகிறார் திருமாவளவன்.  இதனால் பாமக கூட்டணியில் வந்தால்  விசிக வெளியேறிவிடும் என்ற வருத்தமு இருக்கிறது முதல்வர் ஸ்டாலினுக்கு என்கிறார்கள்.   5 ஆண்டுகளாக வலுவாக இருக்கும் கூட்டணி திருமாவளவன் வெளியேறினால் கலகலத்து விடுமோ என்கிற கலக்கமும் இருக்கிறது ஸ்டாலினுக்கு என்கிறார்கள். 

 அதே நேரம் பாமகவையும் விட்டுவிட முடியாது.  கூட்டணியை வலுப்படுத்த பாமகவும் தேவை என்று நினைக்கிறாராம் முதல்வர் ஸ்டாலின்.  அவரை விடவும் அதிகம் பாமகவின் வருகையை விரும்புகிறாராம் துரைமுருகன் . அதற்கு காரணம்,   பாமக கூட்டணியில் இருந்தால் நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் தன் மகன் கதிர் ஆனந்த் சுலபமாக வெற்றி பெற்று விடலாம் என்று கணக்கு போடுகிறாராம் துரைமுருகன்.   அதனால் அவசியம் திமுக கூட்டணியில் பாமக இருக்க வேண்டும் என்று நினைக்கிறாராம் துரைமுருகன்.

அன்

ஸ்டாலின் துரைமுருகன் இருவரின் விருப்பம் மட்டுமல்லாது பல மாவட்ட திமுக செயலாளர்களின் விருப்பமும் இதுவாகத்தான் இருக்கிறதாம்.  பாமகவிற்கு பல மாவட்டங்களில் பத்து சதவீதத்திற்கு மேல் வாக்கு வங்கி உள்ளது.  அதனால் பாமக கூட்டணியில் இருந்தால் அந்த மாவட்டங்களில் திமுகவில் வெற்றி எளிதாகும் என்று அந்த மாவட்ட செயலாளர்களும் விருப்பம் தெரிவித்து வருகிறார்களாம்.

பாமகவும் துரைமுருகன் மூலமாக விசிகவை சரிக்கட்ட  நினைக்கிறதாம்.  இந்த நிலையில் தான் பாமக செய்தி தொடர்பாளர் பாலு சென்னை தலைமை  செயலகத்தில் அமைச்சர் துரைமுருகனை சந்தித்து பேசி இருக்கிறார்.  அப்போது அன்புமணி ராமதாஸ் கொடுத்து அனுப்பிய கடிதத்தை அவரிடம் வழங்கி இருக்கிறார்.  அரியலூர் மாவட்டத்தில் சோழர் கால பாசன திட்டத்தை செயல்படுத்த கோரி அந்த கடிதத்தை எழுதியிருக்கிறார் அன்புமணி ராமதாஸ். 

 மேலோட்டமாக இந்த கடிதம் அந்த கோரிக்கையை வலுயுறுத்தியது  என்றாலும் , அந்த சந்திப்பின் நோக்கமே திருமாவளவனை சரிகட்டி அதன் மூலம் பாமக உள்ளே வருவதற்கு ஏற்பாடு செய்ய பாலு மூலமாக அன்புமணி ராமதாஸ் துரைமுருகனிடம் வலியுறுத்தி இருக்கிறாராம்.