"அரசுக்கு மதிப்பில்லை; பல்கலை.யில் இந்தி திணிப்பு" - சீறிய அன்புமணி!

 
அன்புமணி ராமதாஸ் அன்புமணி ராமதாஸ்

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ட்விட்டரில், "திருச்சியில் நாளை நடைபெறவிருக்கும் பாரதிதாசன் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவுக்கான அழைப்பிதழில் விடுதலை நாள் பவள விழாவைக் குறிக்க Azadi Ka Amrit Mahotsav என்ற இந்தி முழக்கம் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கதாகும். விடுதலை நாள் பவள விழாவுக்கான வாசகமாக Azadi Ka Amrit Mahotsav என்பதை மத்திய அரசு அறிவித்துள்ளது. 

வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” -  அன்புமணி பேட்டி | Anbumani Ramadoss press meet on why pmk got 23 seats in  admk alliance ...

அதை ’’சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா” எனத் தமிழாக்கம் செய்துள்ள தமிழக அரசு, அதைத்தான் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. அதை பாரதிதாசன் பல்கலைக்கழகம் மீறியுள்ளது. அழகான தமிழ் முழக்கத்தைத் தமிழக அரசு உருவாக்கியுள்ள நிலையில், இந்தி முழக்கத்தை பாரதிதாசன் பல்கலைக்கழகம் பயன்படுத்தியிருப்பது இந்தித் திணிப்புதான். தமிழக அரசின் ஆணையை மதிக்காத பாரதிதாசன் பல்கலைக்கழகம் யாருடைய கட்டுப்பாட்டில் செயல்படுகிறது?


அனைத்து தமிழக அரசு நிறுவனங்களும் மாநில அரசின் ஆணையை மதிப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆணையை மதிக்காமல் இந்தி முழக்கத்தைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.