“பாமகவிற்கு மக்களை எப்படி வாக்களிக்க வைப்பது?”- 4வது நாளாக அன்புமணி ஆலோசனை

 
பாமகவிற்கு மக்களை எப்படி வாக்களிக்க வைக்க  வேண்டும்- 4வது நாளாக அன்புமணி ஆலோசனை

சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் நான்காவது நாளாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்  5 மாவட்ட செயலாளர்கள் உடன் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

“இளைஞரணி தலைவர் பதவிக்கு அனுபவம் மிக்க நிர்வாகியை தான் அறிவிக்க வேண்டும்”- ராமதாஸிடம் அழுத்தமாக வலியுறுத்திய அன்புமணி

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள பாமக அலுவலகத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடந்த மூன்று நாட்களாக மாவட்ட செயலாளர்களை நேரில் அழைத்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்‌. இந்த நிலையில் இன்று நான்காவது நாளாக சேலம், தருமபுரி, நாமக்கல், திருச்சி, ஈரோடு மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்திவருகிறார். நேற்று கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், தஞ்சை, நாகை, திருவாரூர், பெரம்பலூர் ஆகிய 7  மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

நேற்று முன்தினம் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், உள்ளிட்ட 12 மாவட்ட செயலாளர்களுடன் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். கடந்த  31ம் தேதி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 12 மாவட்ட செயலாளர்கள் உடன்  பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்  ஆலோசனை நடத்தினார். கடந்த 4 தினங்களாக நடந்து வரும் ஆலோசனைக் கூட்டத்தில்  2026ம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் எப்படி பணியாற்ற வேண்டும், பாமகவிற்கு மக்களை எப்படி வாக்களிக்க வைக்க  வேண்டும், பாமக செய்த சாதனைகளை எடுத்து கூறி வாக்குகள் சேகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கியாதாக  தகவல் வெளியாகியுள்ளது.