இதுவரை இல்லாத வெற்றி! முந்தினார் ஈவிகேஎஸ் இளங்கோவன்!

 
ட்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.  வாக்கு எண்ணிக்கையில் தொடக்கத்திலிருந்தே திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகின்றார்.   

வாக்கு எண்ணிக்கையின் காலை 11.20 மணி நிலவரப்படி 19,032 வாக்குகள் பெற்றுள்ளார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.  இவர்தான் வெற்றிபெறப்போகிறார் என்று முன்கூட்டியே தெரிந்துவிட்டது ஒரு விசயம்,  அதிக வாக்குகள் வித்தியாசத்தில்  வெற்றி பெறப்போகிறார் என்றும் தெரிந்துவிட்டதால்  வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து அதிருப்தியில் வெளியேறி இருக்கிறார் அதிமுக வேட்பாளர் தென்னரசு.

எ

ஈரோடு கிழக்கில் நடந்த தேர்தல்களில் இதுவரை வெற்றி பெற்ற வேட்பாளர்களை காட்டிலும் வாக்கு வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் முந்துகிறார்.  2011ம் ஆண்டில் தேமுதிக வேட்பாளர் சந்திரகுமார் 10,644 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஆனால், அதே தேமுதிக கட்சியின் வேட்பாளர் இந்த இடைத்தேர்தலில் சுயேட்சையை விட குறைவான வாக்குகளை பெற்றிருக்கிறார்.

2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு 7,794 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.  இந்த இடைத்தேர்தலில் அவர் அதிருப்தி அடைந்துள்ளார்.   2021ம் ஆண்டு தேர்தலில்  காங்கிரஸ் வேட்பாளரும் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகனுமான திருமகன் ஈவெரா 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

2023ம் ஆண்டு நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தான் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் ஆகிறார்.

வாக்கு எண்ணிக்கையின்  3 சுற்றுகள் முடிவில்  காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் 32,959 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.  அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 10,727  வாக்குகள் பெற்று 2வது இடத்திலும்,  நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா 1,832  வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.  

 அதிமுக வேட்பாளரை விட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 3 மடங்கு அதிக வாக்குகள் பெற்றுள்ளார். ஈரோடு கிழக்கில் இதுவரை நடந்த தேர்தல்களின் வெற்றி வித்தியாசத்தை விட அதிக வாக்குகளுடன் ஈவிகேஎஸ் இளங்கோவன்  22 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் முன்னிலையில் உள்ளார்.