சகோதரிக்கு குளிர் இன்னும் நீங்கவில்லை.. தேர்தல் வந்து விட்டது, கொஞ்சம் வெளியே வாங்க.. மாயாவதியை நக்கலடித்த அமித் ஷா

 
நானும் மாற போறேன்.. என் கூடவும் நிறைய பேர் மதம் மாறுவாங்க! மாயாவதி பரபரப்பு தகவல்

சகோதரிக்கு குளிர் இன்னும் நீங்கவில்லை, தேர்தல் வந்து விட்டது கொஞ்சம் வெளியே வாங்க என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதியை அமித் ஷா கிண்டலடித்தார்.

உத்தர பிரதேசத்தில் இன்னும் சில மாதங்களில் அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. உத்தர பிரதேச வாக்காளர்களை கவரும் நோக்கில் பா.ஜ.க. அம்மாநில முழுவதும் மக்கள் நம்பிக்கை யாத்திரை நடத்தி வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று அலிகார் மற்றும் மொராதாபாத் ஆகிய பகுதிகளில் நடந்த கூட்டங்களில் கலந்து கொண்டார். அமித் ஷா பேசுகையில் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளை கடுமையாக சாடினார்.

அமித் ஷா

உத்தர பிரதேசத்தில் நடந்த  பொதுக்கூட்டங்களில் அமித் ஷா பேசியதாவது: உத்தர பிரதேசத்தில் முந்தைய சமாஜ்வாடி அரசாங்கம் புதிய வகை ஆய்வகத்தை அமைத்துள்ளது. சமாஜ்வாடியின் ஆய்வகம் (LAB) என்பதில் எல் என்பது திருட்டு, எ என்பது பயங்கரவாதம் சி என்பது ஊழல். சமாஜ்வாடி அரசாங்கத்தால் உத்தர பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய முடியாது. சகோதரியின் (மாயாவதி) குளிர் இன்னும் நீங்கவில்லை. ஒ சகோதரி,  தேர்தல் வந்து விட்டது, கொஞ்சம் வெளியே வாருங்கள்.

அகிலேஷ் யாதவ்

அகிலேஷ் யாதவ் ஆட்சியில் 700 கலவரங்கள் நடந்தன. ஆனால் இன்று யோகி ஆட்சியில் கலவரக்காரர்கள் கண்களை உயர்த்த துணியவில்லை. நிஜாம் (Nizam) என்றால் நிர்வாகம், ஆனால் அகிலேஷ் யாதவை பொறுத்தவரை,  என் என்பதற்கு நசிமுதின், ஐ என்றால் இம்ரான் மசூத்,  இசட் மற்றும் ஏ என்பதற்கு அசாம் கான், எம் என்றால் முக்தார் அன்சாரி. உங்களுக்கு அகிலேஷின் நிஜாம் வேண்டுமா அல்லது யோகி -மோடியின் வளர்ச்சி நிஜாம் வேண்டுமா என்று நான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.