யோகியின் 4.5 ஆண்டு கால ஆட்சிக்குள் அனைத்து குண்டர்களும் உ.பி.யிலிருந்து தப்பியோடி விட்டனர்.. அமித் ஷா

 
அமித் ஷா

முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் 4.5 ஆண்டு கால ஆட்சிக்குள் அனைத்து குண்டர்களும் உத்தர பிரதேசத்திலிருந்து தப்பியோடி விட்டனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

உத்தர பிரதேசத்தில் 403 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அம்மாநில வாக்காளர்களை கவரும் நோக்கில் பா.ஜ.க. நேற்று காஸ்கஞ்சில் மக்கள் நம்பிக்கை யாத்திரையை நடத்தியது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார்.

பள்ளிக்கு செல்லும் மாணவிகள்

அப்போது மத்திய அமைச்சர் அமித் ஷா பேசுகையில் கூறியதாவது: மக்கள் தங்கள் மகள்களை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்ப பயந்தார்கள். ஆனால் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான 4.5 ஆண்டு கால ஆட்சிக்குள் அனைத்து குண்டர்களும் உத்தர பிரதேசத்திலிருந்து தப்பியோடி விட்டனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உத்தரபிரதேசத்தில் திருமணத்திற்கு தடை; அதிர்ச்சி கிளப்பும் யோகி

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அடுத்த சில தினங்களில் உத்தர பிரதேசத்தில் 140 சட்டப்பேரவை தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பா.ஜ.க. ஆதரவு திரட்டுவார் என்று தகவல். பா.ஜ.க.வின் தேசிய தலைவராக அமித் ஷா இருந்தபோது அவரது தலைமையின்கீழ், 2017 உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றது, 2019 மக்களவை தேர்தலில் உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 67 தொகுதிகளை தாமரை வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.