பிரதமர் மோடி எப்போதும் மக்களுக்கு நன்மை செய்யும் முடிவுகளை எடுத்தார்.. அமித் ஷா பாராட்டு

 
அமித் ஷா

பிரதமர் மோடி மக்களுக்கு நல்லதாகத் தோன்றும் முடிவுகளை ஒருபோதும் எடுக்கவில்லை, அவர் எப்போதும் மக்களுக்கு நன்மை செய்யும் முடிவுகளை எடுத்தார் என்று அமித் ஷா பாராட்டினார்.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு அமைந்தது முதல், மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த நாளான டிசம்பர் 25ம் தேதி நல்ல நிர்வாக தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நல்ல நிர்வாக தினத்தை முன்னிட்டு நேற்று (டிசம்பர் 25) தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அமித் ஷா பேசியதாவது:

வாஜ்பாய்

கடந்த 21 அரசாங்கள் (மத்தியில் ஆட்சியில் இருந்த அரசுகள்) தங்கள் வாக்கு வாங்கிகளை மனதில் வைத்து முடிவுகளை எடுத்துள்ளன. நரேந்திர மோடி அரசு மக்களுக்கு நல்லதாகத் தோன்றும் முடிவுகளை ஒருபோதும் எடுக்கவில்லை, அவர் எப்போதும் மக்களுக்கு நன்மை செய்யும் முடிவுகளை எடுத்தார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில், மதிப்புமிக்க அடல்ஜியின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலிகள். அவரது ஜெயந்தி அன்று அடல்ஜியை நினைவு கூர்கிறோம். தேசத்துக்கு அவர் ஆற்றிய செழுமையான சேவையால் நாம் ஈர்க்கப்பட்டோம். அவர் இந்தியாவை வலுவாகவும், வளர்ச்சியைடயவும் செய்ய தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவரது வளர்ச்சி முயற்சிகள் மில்லியன் கணக்கான இந்தியர்களை நேர்மறையாக பாதித்தது. அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாள் நல்ல நிர்வாக தினமாக கொண்டாடப்படுகிறது என்று பதிவு செய்து இருந்தார்.