திமுக பைல்ஸ், பிடிஆர் டேப் - எடப்பாடிக்கு அமித்ஷா போட்ட உத்தரவு

 
a

திமுக பைல்ஸ்,  பிடிஆர் டேப் விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறார் அமித்ஷா. 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக பைல்ஸ் என்கிற பெயரில் திமுகவினரின் சொத்து பட்டியல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.  இதன் பின்னர் தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின்,  முதல்வரின் மருமகன் சபரீசன் இருவரையும் கடுமையாக விமர்சித்து இருவரும் தான் திமுக கட்சி என்று ஆகிவிட்டது என்று விமர்சித்து,  இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து சேர்த்து விட்டார்கள் என்று சரமாரியாக குற்றச் சாட்டை முன்வைத்து இருந்தார் . 

b

ஆனால் அந்த  ஆடியோவில் உள்ள குரல் தன் குரல் அல்ல.  அது ஜோடிக்கப்பட்ட ஒன்று என்று சொல்லி  இருக்கும் பி டி ஆர்,  சபரீசன் என் வழிகாட்டி உதயநிதி என் நம்பிக்கை என்று விளக்கம் அளித்திருக்கிறார் . இது பிடிஆர் அடித்த அந்தர்பல்டி  என்று பாஜகவினர்  விமர்சனம் செய்து வருகின்றனர் .

இந்த நிலையில் அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவாளர்களான கேபி முனுசாமி,  சிவி சண்முகம், ஜெயக்குமார்,  எஸ். பி. வேலுமணி, தங்கமணி ஆகியோருடன் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார் . இந்த சந்திப்பில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இருந்தார். 

sa

 இந்த சந்திப்பின்போது ஒரு முக்கிய விஷயம் விவாதிக்கப்பட்டிருக்கிறது . திமுக பைல்ஸ்,  பிடிஆர் டேப் 2 குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது.   அப்போது இந்த இரண்டு விவகாரத்தையும் கையில் எடுத்து அதிமுக   தீவிர பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று எடப்பாடிக்கு  உத்தரவிடுவது மாதிரி சொல்லி இருக்கிறார் அமித்ஷா. திமுக பைல்ஸ்,  பிடிஆர் டேப் இரண்டையும் மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது .  விரைவில் இது தொடர்பாக விசாரணை நடக்கும்.  அது ரகசியமாக நடைபெறும். இது முதல் கட்ட விசாரணை.  பின்னர் சிபிஐ உள்ளே நுழையும் என்கின்றனர் மத்திய அரசு அதிகாரிகள்.