அமித்ஷாவின் மங்களூர் யாத்திரை ரத்து! காரணம் இதுதான்!

 
a


பாதுகாப்பு அச்சுறுத்தலால் மங்களூர் யாத்திரையை ரத்து செய்துள்ளார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

 மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கர்நாடகம் செல்கிறார்.  தட்சிண கன்னடாவுக்கு சென்று அங்கே பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.  
அதன் பின்னர் புத்தூரில் நடைபெறும் கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். 

 தட்சிண கன்னடாவில் அடிக்கடி கலவரங்கள் ஏற்பட்டதாலும் கொலை சம்பவங்கள் அதிகரித்தாலும் அமித் ஷாவின் வருகைய ஒட்டி 1500 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.   புத்தூரில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மங்களூர் செல்கிறார் அமித்ஷா.  புத்தூர் நிகழ்ச்சி முடித்த பின்னர் அமித்ஷா மங்களூருக்கு செல்வார் என்று  கூறப்படுகிறது.

a

ஆனால்,  பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பெங்களூருவில் அமித்ஷா பங்கேற்க இருந்த பாஜக யாத்திரையை திடீரென ரத்து செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது .

கெஞ்சாரு பகுதியில் கட்சித் தொண்டர்களுடன் அமித்ஷா கலந்துரையாடுகிறார்.  இக்கூட்டத்திற்கு அவர் தலைமை தாங்குவார் என்று கூறப்படுகிறது .  ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் நடக்கும் கூட்டத்தில் ஆறு மாவட்டங்களை சேர்ந்த பாஜக கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள் . தவிர கூட்டுறவு வங்கியின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்திலும் அமித்ஷா பங்கேற்கிறார்.

 பின்னர் ஹனுமகிரியில் கட்டப்பட்டிருக்கும் பாரதமாதா கோவிலை அவர் திறந்து வைக்கிறார்.   தமிழ்நாட்டில் கன்னியாகுமரிக்கு அடுத்து பாரத மாதாவுக்கு கோயில் கட்டி இருப்பது ஹனுமரிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

 கர்நாடக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக தலைவர்கள் அடிக்கடி கர்நாடகம் வந்த வண்ணம் இருக்கிறார்கள்.  அதேபோன்றுதான் அமித்ஷாவின் வருகை தட்சிண கன்னடா மாவட்டத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.