பாசிடிவ் செய்தி போட்டால்தான் பத்திரிகைக்கு அரசாங்க விளம்பரம்.. சர்ச்சையை கிளப்பிய மம்தாவின் பேச்சு

 
மம்தா

நேர்மறையான செய்திகளை வெளியீட்டால் மட்டுமே பத்திரிகைகளுக்கு அரசாங்க விளம்பரம் கொடுக்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

திரிணாமுல் காங்கிரஸ் தலைவியும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது உள்ளூர் செய்தியாளர் ஒருவர் முதல்வர் மம்தா பானர்ஜியிடம் எங்களது கிராமப்புற பத்திரிகைக்கு அரசு விளம்பரம் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார். இதனையடுத்து மம்தா பானர்ஜி கூறியதாவது: உள்ளூர்  பத்திரிகைகள் அரசாங்க விளம்பரங்களை பெற விரும்பினால் பாசிட்டிவ் (நேர்மறையான) செய்திகளை வெளியிட வேண்டும்.

செய்தித்தாள்கள்

எதிர்மறையான செய்திகளை விரும்பவில்லை. செய்தித்தாள் வெளியீட்டாளர்கள் தங்கள் பத்திரிகையை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும். நீங்கள் நேர்மறையான அல்லது எதிர்மறையான செய்திகளை செய்கிறீர்களாக என்பதை அவர்கள் உறுதி செய்த பிறகு, உங்களுக்கு அரசு விளம்பரங்களை கொடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களிடம் கூறுவேன்.

அமித் மால்வியா

செய்தித்தாள் வெளியீட்டாளர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். எதிர்மறையை நேர்மறையாக மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பா.ஜ.க.வின் ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா டிவிட்டரில், மம்தா பானர்ஜியின் செய்தியாளர்கள் சந்திப்பு தொடர்பான வீடியோ பதிவேற்றம் செய்து, மம்தாவின் பேச்சை மொழிப்பெயர்பு செய்து பதிவு செய்து இருந்தார். நேர்மறையான செய்திகளை வெளியீட்டால் மட்டுமே அரசு விளம்பரம் கிடைக்கும் என்று மம்தா பானர்ஜி பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.