கும்பல் படுகொலையின் தந்தை ராஜீவ் காந்தி.. ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்த பா.ஜ.க.

 
‘ராஜீவ் காந்தியின் 29-வது நினைவு தினம்’..அஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கப்பட்டதால் காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்குவாதம்!

மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன் கும்பல் படுகொலை நடைமுறையில் இருந்ததாக கேள்விப்பட்டிருக்கவில்லை என்ற ராகுல் காந்திக்கு, கும்பல் படுகொலையின் தந்தை ராஜீவ் காந்தி என்று பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி டிவிட்டரில், 2014ம் ஆண்டு நரேந்திர மோடி ஆட்சிக்கு வரும் வரை, கும்பல் கொலை என்பதை நடைமுறையில் கேள்விப்பட்டிருக்கவில்லை என்று டிவிட் செய்து இருந்தார். மேலும் அந்த டிவிட்டின் இறுதியில் நன்றி மோடிஜி என்று ஹேஷ்டேக் போட்டு இருந்தார்.

ராகுல் காந்தி

பா.ஜ.க.வின் ஐ.டி.பிரிவு தலைவர் அமித் மால்வியா டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில் ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்துள்ளார். அமித் மால்வியா டிவிட்டரில், அகமதாபாத் (1969), ஜல்கான் (1970), மொராதாபாத் (1980), நெல்லி (1983), பிவாண்டி (1984), டெல்லி (1984), அகமதாபாத் (1985), பாகல்பூர் (1989), ஹைதராபாத் (1990), கான்பூர் (1992), மும்பை (1993).. நேரு-காந்தி பரிவாரத்தின் கண்காணிப்பில் 100க்கும் மேற்பட்டோர் இறந்த சிறிய பட்டியல் இது.

அமித் மால்வியா

மற்றொரு டிவிட்டில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மரணத்தை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை குறித்து ராஜீவ் காந்தி பேசிய வீடியோ ஒன்ற பதிவேற்றம் செய்து, சீக்கியர்களின் இரத்தத்தை உறைய வைக்கும் இனப்படுகொலையை நியாயப்படுத்தும் இனப்படுகொலையை நியாயப்படுத்தும் கும்பல் படுகொலையின் தந்தை ராஜீவ் காந்தியை சந்திக்கவும். காங்கிரஸ் தெருக்களில் இறங்கி இரத்தத்துக்கு இரத்தம் பழிவாங்கு போன்ற முழக்கங்களை எழுப்பியது, பெண்களை கற்பழித்தது, சீக்கிய ஆண்களின் கழுத்தில் எரியும் டயர்களை சுற்றியது. வடிகால்களில் வீசப்பட்ட கருகிய உடல்களை நாய்கள் தின்றன என்று பதிவு செய்து இருந்தார்.