தாஜ்மஹாலை கட்டியதே நான்தான் என்று அகிலேஷ் யாதவ் கூறினால் யாரும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.. பா.ஜ.க.

 
பா.ஜ.க. ஏன் தொடர்ந்து வெற்றி பெறுகிறது என்று ஆச்சரியப்படுகிறார்கள்… காந்தி குடும்பத்தை கிண்டலடித்த மால்வியா

தாஜ்மஹாலை கட்டியதே நான்தான் என்று அகிலேஷ் யாதவ் கூறினால் யாரும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை என்று அமித் மால்வியா அகிலேஷே கிண்டல் அடித்தார்.

உத்தர பிரதேசம் பல்ராம்பூரில் சரயு நஹர் தேசிய திட்டத்தை (நீர் பாசன திட்டம்) பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். அந்த தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், சிலருக்கு ரிப்பன் வெட்டுவதற்கு மட்டுமே முன்னுரிமை என்று அகிலேஷ் யாதவை மறைமுகமாக கிண்டல் அடித்தார். இதற்கு அகிலேஷ் யாதவ், எனது அரசாங்கம் திட்டத்துக்காக நிலத்தை ஒதுக்காமல் இருந்திருந்தால், அது ஒருபோதும் நிறைவேறியிருக்காது என்று பதிலடி கொடுத்தார்.

பிரதமர் மோடி

இந்நிலையில் பா.ஜ.க.வின் ஐ.டி.பிரிவு தலைவர் அமித் மால்வியா தனது பங்குக்கு அகிலேஷ் யாதவை கிண்டல் அடித்துள்ளார். அமித் மால்வியா கூறியதாவது: சரயு திட்டம் 1978ல் தொடங்கப்பட்டது. அப்போது அகிலேஷூக்கு 4 வயது இருக்கும். 2017ல் (அகிலேஷ்) ஆட்சியை இழந்தபோது, 35 சதவீத பணிகள் மட்டுமே நடந்து இருந்தது. யோகி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, மத்திய அரசின் உதவியுடன் நான்கு ஆண்டுகளில் முழுத் திட்டமும் முடிக்கப்பட்டது. ஆனால் இன்று (நேற்று) காலையில் இந்த திட்டத்துக்கு தான் அடிக்கல் நாட்டியதாக கூறி, ஒவ்வொரு விஷயத்திலும் பொய் சொல்கிறார் என்பது தெளிவாகிறது.

அகிலேஷ் யாதவ்

தாஜ்மஹாலை கட்டியதே நான்தான் என்று அகிலேஷ் யாதவ் கூறினால் யாரும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போது, யோகி அரசு விவசாயிகள், பெண்கள் மற்றும் சமூகத்தின் பின்தங்கிய பிரிவினருக்காக எவ்வளவு உழைத்துள்ளது என்பதை அவர் தெளிவாக புரிந்து கொள்வார். முடிவு வெகு தொலைவில் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.