நவ்ஜோத் சிங் சித்துவின் விருப்பத்துக்கு அடிபணிய வைக்கப்படும் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி .. அமரீந்தர் சிங்

 
கேப்டன் அமரீந்தர் சிங்

நவ்ஜோத் சிங் சித்துவின் விருப்பத்துக்கு முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி அடிபணிய வைக்கப்படுகிறார் என்று கேப்டன் அமரீந்தர் சிங் தெரிவித்தார்.

2022 பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலுக்கு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை அந்த கட்சி நியமனம் செய்துள்ளது. சித்து நியமனம் தொடர்பாக பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கேப்டன் அமரீந்தர் சிங் கூறியதாவது: அபரிமிதமான ஆற்றல் இருந்தும், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் விருப்பத்துக்கு அவர் (முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி) அடிபணிய வைக்கப்படுகிறார் என்று நான் வருத்தப்படுகிறேன். 

நவ்ஜோத் சிங் சித்து

சன்னி இறுதியில் ஒரு இரவு காவலாளியாக மட்டுமே முடிவடைவார். சுயமரியாதை உள்ள எந்த தலைவரும் இத்தகைய அவமானத்தை ஏற்கக்கூடாது. இது போன்ற அவமானங்களையும், அவமரியாதைகளையும் எதிர்கொள்வதை விட சன்னி ராஜினாமா செய்ய வேண்டும். பட்டியலினத்தை சேர்ந்த ஒருவரை முதலமைச்சராக நியமித்ததாக காங்கிரஸ் கூறியது. ஆனால் இப்போது அவரை (சன்னி) பஞ்சாப் காங்கிரஸ் தலைவருக்கு அடிமையாக்கி உள்ளது. 

சரண்ஜித் சிங் சன்னி

எஸ்.சி. வாக்குகளை பெறுவதற்காக அவர் (சன்னி) வெறும் காட்சி பொருளா? யாரோ ஒருவர் கெட்டுப்போன குழந்தையை போல நடந்து கொள்வதற்காகவும், நாளுக்கு நாள்  அவதூறு செய்வதாலும், நீங்கள் அவருடைய எல்லா மிரட்டலுக்கும் அடிபணிந்து, சிறப்பாக செயல்படும் உங்கள் முதல்வரை அவமரியாதை செய்து அவமானப்படுத்துகிறீர்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.