அந்த எல்லா வீடும் உங்க வீடுதான் ராகுல்! பிரகாஷ்ராஜ்
கொடுங்கோல் ஆட்சியாளர்களிடமிருந்து நாட்டை காப்பாற்ற முயற்சிக்கும் ஒவ்வொரு இந்தியரின் வீடும் உங்கள் வீடு தான் ராகுல் காந்தி என்று கூறி இருக்கிறார் நடிகர் பிரகாஷ்ராஜ்.
2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் மோடி என்கிற குடும்பப் பெயர் பற்றி அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. பின்னர் அவருக்கு நீதிமன்ற ஜாமீன் வழங்கப்பட்டது பட்டிருக்கிறது. கர்நாடகா மாநிலத்தின் கோலாறில் நடந்த பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசியது தான் இந்த அளவுக்கு சர்ச்சையாக மாறியிருக்கிறது. ராகுலுக்கு எதிராக திரும்பி இருக்கிறது.
இது தொடர்பாக சூரத்தில் தான் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்து தீர்ப்பு வழங்கப்பட்டது . நீதிபதி அளித்த தீர்ப்பில் அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதை தொடர்ந்துஅவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை அடுத்து ராகுல்காந்தி தரப்பில் ஜாமீன் கூறப்பட்டதை அடுத்து நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. 30 நாட்களில் மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு அனுமதி வழங்கப்பட்டது. சிறை தண்டனை வழங்கப்பட்டதால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ராகுல் காந்தி .
இதனால் அரசு பங்களாவை காலி செய்வதற்கான நோட்டீஸ் ராகுல் காந்திக்கு அனுப்பப்பட்டிருந்தது. எனக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவை காலி செய்கிறேன் . இதுவரை கழித்த நினைவுகள் மகிழ்ச்சியானது . நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த அதன் மூலம் இதற்கான வாய்ப்பு வழங்கிய மக்களுக்கு நன்றி. பங்களாவை காலி செய்வதற்காக கிடங்கு வழங்கப்பட்ட கடிதத்தில் உள்ள அம்சங்களுக்கு நான் கட்டுப்படுவேன் என்று கூறியிருந்தார்.
இதன் பின்னர் ராகுல் காந்திக்காக தனது பங்களாவை தருவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார். அதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் பலரும் ராகுல் காந்திக்கு ஆதரவு குரல் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் தான் நடிகர் பிரகாஷ்ராஜ், கொடுங்கோல் ஆட்சியாளர்களிடமிருந்து நாட்டை காப்பாற்ற முயற்சிக்கும் ஒவ்வொரு வீடும் உங்கள் வீடு தான் ராகுல் காந்தி என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.