உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசு பொய்களின் ஆட்சி மற்றும் மக்களை முட்டாளாக்குகிறது... அகிலேஷ் யாதவ்

 
அகிலேஷ் யாதவ்

உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசு பொய்களின் ஆட்சி மற்றும் மக்களை முட்டாளாக்குகிறது என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார்.

உத்தர பிரதேசம் பிரதாப்கரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் போது, அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அகிலேஷ் யாதவ் கூறியதாவது: உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசு பொய்களின் ஆட்சி மற்றும் மக்களை முட்டாளாக்குகிறது. மாநிலத்தில் இருந்து காளை மற்றும் புல்டோசரை அகற்ற சமாஜ்வாடி கட்சி தலைமையிலான அரசு அவசியம். 

பா.ஜ.க.

சிலர் நாட்டை மதம், பிராந்தியம் மற்றும் சாதியின் அடிப்படையில் பிரித்து தங்கள் நலன்களை அடைகின்றனர்.  பா.ஜ.க. அரசாங்கத்தால் சமாஜ்வாடி தொண்டர்கள் துன்புறுத்தப்படுகின்றனர். சமாஜ்வாடி தொண்டர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரவுடி விகாஸ் துபே மனைவி எங்க கட்சி உறுப்பினரே கிடையாது.. அலறும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி..

மொத்தம் 403 உறுப்பினர்களை கொண்ட உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தல் பா.ஜ.க.வுக்கும், சமாஜ்வாடி கட்சிக்கும் இடையிலான நேரடி போட்டியாகதான் இருக்கும் என்று கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.