இந்த பா.ஜ.க. முதல்வரை விட யாராலும் பொய் சொல்ல முடியாது.. யோகி ஆதித்யநாத்தை தாக்கிய அகிலேஷ் யாதவ்

 
கரும்பு பயிரிடுவதை குறைத்தால் சர்க்கரை நோய் குறைந்துவிடும்: யோகி ஆலோசனை

இந்த பா.ஜ.க. முதல்வரை விட யாராலும் பொய் சொல்ல முடியாது, இந்த பா.ஜ.க. முதல்வரை விட ஒருவர் பொய் சொல்ல முடியும்? என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அகிலேஷ் கிண்டல் செய்தார்.

உத்தர பிரதேசத்தில் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான அசிம் அருண் நேற்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் முன்னிலையில் அந்த கட்சியில் இணைந்தார். அதேசமயம் கடந்த சில தினங்களுக்கு முன் பா.ஜ.க.விலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் தாரா  சிங் சவுகான் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார்.

அகிலேஷ் யாதவ்

சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் லக்னோவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: காலப்போக்கில் அனைத்தையும் தனியார்மயமாக்குவதும், பின்னர் பி.ஆர். அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தையும், இடஒதுக்கீட்டு முறையை பணயம் வைப்பதும் பா.ஜ.க.வின் உத்தி என்பதை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துகள் புரிந்து கொண்டுள்ளனர்.

தேர்தல் ஆணையம்

இந்த பா.ஜ.க. முதல்வரை (யோகி ஆதித்யநாத்) விட யாராலும் பொய் சொல்ல முடியாது, இந்த பா.ஜ.க. முதல்வரை விட ஒருவர் பொய் சொல்ல முடியும். கடந்த 5 ஆண்டுகளில் அசிம் அருணுடன் பணிபுரிந்த அனைத்து அதிகாரிகளையும் பதவி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்தில் புகார் செய்வேன். ஏனெனில் அவர்கள் பா.ஜ.க.வினர்களாக வேலை செய்வார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.