வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம்.. அரவிந்த் கெஜ்ரிவாலை காப்பியடிக்கும் அகிலேஷ் யாதவ்

 
அகிலேஷ் யாதவ்

உத்தர பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால் வீடுகளுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில மக்களுக்கு அகிலேஷ் யாதவ் வாக்குறுதி அளித்துள்ளார்.

உத்தர பிரதேசம் லக்னோவில் சமாஜ்வாடி கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பங்கேற்ற அந்த கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசுகையில், தேர்தலில் வெற்றி பெற்று சமாஜ்வாடி அரசாங்கம் அமைந்தால் வீடுகளுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். விவசாயிகள் தங்கள் வயல்களுக்கு நீர் பாசனம் செய்ய இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அம்மாநில மக்களுக்கு வாக்குறுதி அளித்தார்.

ரவுடி விகாஸ் துபே மனைவி எங்க கட்சி உறுப்பினரே கிடையாது.. அலறும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி..

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால்  அண்மையில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற பஞ்சாப் மற்றும் கோவாவில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அந்த மாநிலங்களில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் வீடுகளுக்கு  மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் அந்த மாநில  மக்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.  தற்போது அரவிந்த் கெஜ்ரிவாலை போன்று உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் வாக்குறுதி அளித்துள்ளார்.  

இன்று முதல்வராக பதவியேற்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்!

அகிலேஷ் யாதவின் 300 யூனிட் இலவச மின்சாரம் வாக்குறுதி குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், அவரது அரசாங்கம் மின்சாரம் வழங்கவில்லை என்றால், முதலில் எப்படி இலவசமாக கொடுக்க முடியும் என்று அவரிடம் (அகிலேஷ் யாதவ்) கேட்க வேண்டும் என்று தெரிவத்தார். அண்மையில் ராம்பூரில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுகையில், 2017ம் ஆண்டுக்கு முன் சமாஜ்வாடி  ஆட்சியில் இருந்தபோது, மின்சாரம் மற்றும் கழிவறைகளுக்கு  ஒதுக்கப்பட்ட பணம் எங்கே போனது என்று கேள்வி கேட்டார்.