முதல்ல என் அரசாங்க திட்டங்கள்.. இப்பம் மாயவாதி அரசின் திட்டங்களுக்கு பா.ஜ.க. அரசு அடிக்கல் நாட்டுகிறது.. அகிலேஷ் யாதவ்

 
பா.ஜ.க.

முதலில் சமாஜ்வாடி அரசாங்க திட்டங்கள், இப்போது மாயாவதி அரசின் திட்டங்களுக்கு மத்திய பா.ஜ.க. அரசு அடிக்கல் நாட்ட தொடங்கியுள்ளது என்று அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார்.

உத்தர பிரதேசம் ஷாஜன்கான்பூரில் கங்கா எக்ஸ்பிரஸ் சாலை திட்டத்துக்கு பிரதமர் மோடி நேற்று மதியம் அடிக்கல் நாட்டினார். ரூ.36,200 கோடி செலவில் 594 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ஆறுவழி விரைவு சாலை அமைக்கப்படும். உத்தர பிரதேசத்தில் தனது அரசாங்கம் (முந்தைய அரசு) தொடங்கிய திட்டங்களுக்கு தற்போதைய பா.ஜ.க. அரசு பெயர் வாங்குகிறது என்று சமீபகாலமாக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டி வந்தாா்.

அகிலேஷ் யாதவ்

இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய கங்கா எக்ஸ்பிரஸ் சாலை திட்டத்திலும் பா.ஜ.க.வை அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். இந்த முறை தனது அரசாங்கம்தான் திட்டத்தை கொண்டு வந்ததாக கூறவில்லை மாறாக மாயாவதி தொடங்கி வைத்த திட்டம்தான் கங்கா எக்ஸ்பிரஸ் சாலை என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் இத தொடர்பாக கூறியதாவது: இது சமாஜ்வாடி கட்சியின் எக்ஸ்பிரஸ் வே அல்ல. 

புலம்பெயர்ந்தோரின் அவல நிலைக்கு காங்கிரசும், பா.ஜ.க.வுக்கும் சம பொறுப்பு உள்ளது…. மாயாவதி குற்றச்சாட்டு..

மாயாவதி தொடங்கிய திட்டத்துக்கு அடிக்கல் நாட்டும் பணியை பா.ஜ.க. செய்து வருகிறது. மாயாவதி கங்கா எக்ஸ்பிரஸ்வே சாலையை கனவு கண்டாள். சமாஜ்வாடி அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்ட பிறகு, பகுஜன் சமாஜ் கட்சியின் திட்டங்களுக்கு மத்திய அரசு அடிக்கல் நாட்ட மத்திய அரசு தொடங்கியுள்ளது என்று நான் நினைக்கிறேன். உத்தர பிரதேசத்தில் இரட்டை என்ஜின்கள் ஒன்றுடன் ஒன்று மோத தொடங்கியுள்ளன. இரட்டை என்ஜின்கள் மோதுகின்றன என்பதை மேற்கோள் காட்டக்கூடிய பல நிகழ்வுகள் உள்ளன. மாநிலத்துக்கு என்ன லாபம்? மாநிலத்தில் முதலீடு எங்கே? மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநிலம் எவ்வளவு ஒத்துழைத்துள்ளது?. இவ்வாறு அவர் தெரிவித்தார்.