சரயு நஹா் திட்டத்தை தொடங்கி வைத்த மோடி.. சமாஜ்வாடி பணிக்கு பா.ஜ.க. பெயர் வாங்குகிறது.. அகிலேஷ் யாதவ்

 
அகிலேஷ் யாதவ்

சரயு நஹர் தேசிய திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதேவேளையில், சமாஜ்வாடி அரசாங்கம செய்த பணிக்கு பா.ஜ.க. பெயர் வாங்குகிறது என்று அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தர பிரதேசம் பல்ராம்பூர் பகுதியில் ககாரா, சரயு, ரப்தி, பங்கங்கா, ரோகினி ஆகிய 5 நதிகளை இணைக்கும் சரயு நஹர் தேசிய நீர்பாசன திட்டம் கடந்த 1978ல் தொடங்கப்பட்டது. ஆனால் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யாதது போன்ற பல்வேறு காரணங்களால் பல பத்தாண்டுகளாக நிறைவேறாமல் இருந்து வந்தது. இந்நிலையில், 2016ம் ஆண்டு பிரதமர் வேளாண் நுண்ணீர் பாசன திட்டத்தின்கீழ், இத்திட்டம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என்ற இலக்குடன் மீண்டும் செயல்படுத்தப்பட்டது. 

சரயு நஹர் திட்டம்

இதனால் அடுத்த 4 ஆண்டுகளிலேயே சரயு நஹர் தேசிய திட்டம் முடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சரயு நஹர் தேசிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்நிலையில் சமாஜ்வாடி அரசாங்கம் செய்த பணிக்காக பா.ஜ.க. பெயர் பெறுகிறது என்று அகிலேஷ் யாதவ் விமர்சனம் செய்துள்ளார். சரயு நஹர் தேசிய திட்டத்தை பிரதமர் தொடங்கி வைப்பதற்கு முன்னதாக, அகிலேஷ் யாதவ் டிவிட்டரில், சமாஜ்வாடி அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது, நான்கில் 3 பங்குகளை பணிகள் முடிக்கப்பட்ட சரயு நஹர் தேசிய திட்டத்தின் மீதமுள்ள பணிகளை முடிக்க உத்தர பிரதேச பா.ஜ.க. அரசாங்கம் 5 ஆண்டுகள் எடுத்தது.

பா.ஜ.க.

2022 சட்டப்பேரவை தேர்தல் கட்சிக்கு ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும்  மாநிலம் வளர்ச்சியின கால்வாய்களில் ஊசலாடும் என்று பதிவு செய்துள்ளார். 403 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.