பா.ஜ.க. எம்.எல்.ஏ. கிண்டல் செய்த விவகாரம்.. மாநிலத்தின் சட்டப்பேரவை உறுப்பினர்களை போல் நடந்து கொள்ளுங்க. அஜித் பவார்

 
ஆதித்யா தாக்கரே

ஆதித்யா தாக்கரேவை பா.ஜ.க. எம்.எல்.ஏ. மியாவ் என்று ஒலியெழுப்பி கிண்டல் செய்த விவகாரத்தில், நாம் அனைவரும் மாநிலத்தின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் போல் நடந்து கொள்ள வேண்டும் என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் வலியுறுத்தினார்.

மகாராஷ்டிராவில் கடந்த வாரம் அம்மாநில சட்டப்பேரவையின் வெளியே பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பல்வேறு விஷயங்களை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அம்மாநில அமைச்சரும், சிவ சேனா எம்.எல்.ஏ.வுமான ஆதித்யா தாக்கரே சட்டப்பேரவை கட்டிடத்துக்குள் செல்லும்போது, பா.ஜ.க. எம்.எல்.ஏ. நிதேஷ் ரானே, மியாவ் என்று பூனே போல் ஒலியெழுப்பி அவரை (ஆதித்யா தாக்கரே) கிண்டல் செய்தார். ஆனால் அதனை கண்டு கொள்ளாமல் ஆதித்யா தாக்கரே சட்டப்பேரவைக்குள் சென்றார்.

நிதேஷ் ரானே

பூனை போல் ஒலியெழுப்பி ஆதித்யா தாக்கரேவை கிண்டல் செய்த நிதேஷ் ரானேவை சட்டப்பேரவையிலிருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று சிவ சேனா எம்.எல்.ஏ.க்கள் கொந்தளித்தனர். இந்த விவகாரம் நேற்று அம்மாநில சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. அம்மாநில சட்டப்பேரவையில், நாம் அனைவரும் மாநிலத்தின் சட்டப்பேரவை உறுப்பினர்களை போல் நடந்து கொள்ள வேண்டும் என்று துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்தார்.

அஜித் பவார்

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நேற்று அம்மாநில முதல்வர் அஜித் பவார் பேசுகையில், நாம் அனைவரும் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்களை போலவும், அத்தகைய சிறந்த ஜனநாயகத்தின் சட்டமியற்றுபவர்களுக்கு ஏற்ற வகையில் நடந்து கொள்ள வேண்டும். நாம் நாய்கள், சேவல்கள் அல்லது பூனைகளை பிரதிநிதித்துவப்படுத்தவதில்லை. ஆகையால் அவற்றின் ஒலிகளை பிரதிபலிப்பதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.