அண்ணாமலை வகுத்த வியூகம்! அமித்ஷா காட்டிய பச்சைக்கொடி

 
அன்ன்

எனது வியூகத்திற்கு பச்சை கொடி காட்டினால் வரும் 2026இல் எதிர்க்கட்சியாகவும் 2031இல் ஆளுங்கட்சியாகவும் தமிழகத்தில் பாஜக இருக்கும் என்று சொன்ன அண்ணாமலைக்கு தலைமை பச்சைக்கொடி காட்டியதாக தகவல் பரவுகிறது.

ன

தமிழக பாஜகவின் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட தருணத்தில் இருந்து 2026இல் பாஜக தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்று சொல்லி வருகிறார். அண்ணாமலையின் இந்த தொடர் முழக்கம் தான் அதிமுகவிற்கு கடும் அதிருப்தியை கொடுத்து வந்தது.  அதனால் தான் கூட்டணிக்குள் சலசலப்பு எழ ஆரம்பித்தது. ஆனாலும் அண்ணாமலை தொடர்ந்த அந்த முழக்கத்தை எழுப்பி வருகிறார். 

 அதே போல் கூட்டணி வைத்தால் கடைசி வரைக்கும் பாஜக இதே நிலைமையில் தான் இருக்கும்,  தனித்துப் போட்டியிட்டால்தான் பாஜகவின் செல்வாக்கு தமிழகத்தில் அதிகரிக்கும் என்றும் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறார்.  தமிழக பாஜகவின் சீனியர்கள் அண்ணாமலையின் இந்த முடிவுக்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே வந்தாலும்,  அண்ணாமலை மட்டும்,  தான் எடுத்த முடிவில் ரொம்பவே  பிடிவாதமாக இருக்கிறார்.   அவரின் ஆதரவாளர்களும் இந்த தடாலடி முடிவை எடுத்தால் தான் தமிழகத்தில் பாஜகவுக்கு தனித்த செல்வாக்கு கிடைக்கும் . இல்லையென்றால் இப்படியே இருந்து விட வேண்டியது தான் என்றும் கூறி வருகிறார்கள்.

அன்ன்

 ஆனால் 2024 நாடாளுமன்றத் தேர்தலை பொருத்தவரைக்கும் பிரதமர் மோடியின் வெற்றி தான் முக்கியம் என்பதால்,  தமிழகத்தில் கூட்டணியுடன் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பாஜக தலைமை விரும்புகிறது.   அண்ணாமலையோ கூட்டணி அமைத்து போட்டியிடுவதை விட தனித்துப் போட்டியிட்டால் தமிழகத்தில் நிச்சயம் இருமுனை போட்டி தான் நிலவும்.   அதிமுகவை மூன்றாவது இடத்திற்கு தள்ளிவிட முடியும் என்று அதற்கான ஆதாரங்களை தலைமையிடம் சமர்ப்பித்து இருக்கிறார்.

 தமிழகத்தை பொறுத்த வரைக்கும் தற்போது பாஜக தான் எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது.  இதே நிலை தொடர்ந்தால் நாடாளுமன்றத் தேர்தலில் புதுக்கூட்டணி அமைத்து போட்டியிட்டால் திமுக- பாஜக என்ற இருமுனை போட்டிதான் நிலவும்.   அதிமுகவை நிச்சயம் மூன்றாவது இடத்திற்கு தள்ளிவிட முடியும்.  அதன் மூலம் பாஜகவின் ஓட்டு சதவீதத்தை அதிகரித்து விடலாம்.  அப்படியே கொண்டு சென்றால்,  2026ல் தமிழகத்தில் பாஜக எதிர்க்கட்சியாக உருவெடுக்கும்.  அதே 2031 தேர்தலில் ஆளுங்கட்சியாக உருவெடுக்கும் என்று சொன்னதோடு அல்லாமல்,  சில புள்ளி விவரக் கணக்குகளையும் தலைமையிடம் சமர்ப்பித்திருக்கிறார் அண்ணாமலை .இதையெல்லாம் வைத்து தான் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவை தவிர்த்து தமிழகத்தில் புதுக்கூட்டணி அமைக்கும் அண்ணாமலை வியூகத்திற்கு பச்சைக் கொடி காட்டி இருக்கிறாராம் அமித்ஷா.