அந்த ஓட்டுகள் இனி அதிமுகவுக்கு கிடைக்காது - அமித்ஷாவிடம் அடித்துச்சொன்ன அண்ணாமலை

 
ம்

அதிமுகவுடன் தான் கூட்டணி அமைக்க வேண்டும் என்று இத்தனை நாளும் பாஜக தலைமை விரும்பியது.  ஆனால் அண்ணாமலையின் அடுத்தடுத்த அதிரடிகளால் தற்போது அந்த முடிவை பாஜக தலைமை மாற்றிக் கொண்டதாகவே தெரிகிறது. 

 அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே தமிழகத்தில் வெற்றி பெற முடியும் என்கிற நிலை இருக்கிறது என்று இத்தனை நாளும் நம்பி வந்தது பாஜக. அந்த நம்பிக்கையை தகர்த்தெறிந்திருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.  முதலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்று அண்ணாமலை சொன்னபோது தலைமை அதிர்ந்து இருக்கிறது.  ஆனால் அதற்கான காரணங்களை அடுக்கடுக்காக அண்ணாமலை எடுத்து வைத்த போது அவர் சொல்வது சரிதான் என்பது போல் தலையாட்டி இருக்கிறது பாஜக தலைமை.

அம்

 ஒருங்கிணைந்த அதிமுக வேண்டும் என்று பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது . அதாவது எடப்பாடி பழனிச்சாமி , ஓ. பன்னீர்செல்வம்,  சசிகலா,  டிடிவி தினகரன் நான்கு பேரும்  இணைந்து ஒன்றுபட்ட அதிமுகவாக இருந்தால்தான் ஓட்டுகள் சிதறாமல் இருக்கும்.  திமுகவை எதிர்ப்பதற்கு வலுவாக இருக்கும் என்ற உண்மையை உணர்ந்திருந்தது பாஜக.  ஆனால் எடப்பாடி பழனிச்சாமியின் பிடிவாதத்தால் அது நடக்காது என்ற நிலை வந்த போது,  அதிமுகவின் வாக்குகள் சிதறாமல் இருக்காது என்ற நிலை இருக்கும்போது , எதற்கு அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் அண்ணாமலை.  இதைத்தான் தனது டெல்லி விசிட்டில்  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,  பாஜகவின் தேசிய தலைவர் நட்டா மற்றும் பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் பி. எல் சந்தோஷ் ஆகியோரிடம் எடுத்துச் சொல்லி இருக்கிறார்.

 அதிமுக -பாஜக இடையேயான மோதல் நாளுக்கு நாள் வலுத்து வரும் நிலையில் தான்,  டெல்லி சென்று முக்கிய தலைவர்களை சந்தித்து பேசி இருக்கிறார் அண்ணாமலை . ஒருங்கிணைந்த அதிமுகவாக செயல்பட வேண்டும் என்று அண்ணாமலையின் வேண்டுகோளை எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக்கொள்ளாததால் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க கூடாது என்ற முடிவை அறிவித்தார் அண்ணாமலை.  அப்படி சமரசம் செய்து கொண்டு கூட்டணி அமைக்க வேண்டும் என்றால் தலைவர் பொறுப்பில் இருக்க மாட்டேன் என்று அதிரடியாக அறிவித்தார்.

 அண்ணாமலையின் இந்த தலாடியை பார்த்து,  அதிமுகவை அனுசரித்துச் செல்லுமாறு  நட்டாது அறிவுறுத்தி இருக்கிறார்.  இதனால் இக்கட்டான நிலையில் இருந்த அண்ணாமலை டெல்லி சென்று நிலைமையை எடுத்துச் சொல்லி இருக்கிறார்.   எம்ஜிஆர்- ஜெயலலிதா காலத்து அதிமுக இப்போது இல்லை.  அதிமுக என்ற கட்சி உருவானதும் 30 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்ததற்கும் முக்கிய காரணமே திமுக எதிர்ப்பு தான். 

எ

  திமுகவை திமுக தீய சக்தி என்றும்,  திமுகவினரை பகையாளர்களாக கருதியுமே எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் அரசியல் செய்தார்கள்.  ஆனால் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னால் இன்னொரு திமுகவாக மாறிவிட்டது அதிமுக.  இதனால் திமுகவுக்கு எதிரான ஓட்டுகள் இனி அதிமுகவுக்கு கிடைக்காது என்று எடுத்துச் சொல்லி இருக்கிறார் .  மேலும்,  எம்ஜிஆர்- ஜெயலலிதா இருக்கும்போது அதிமுகவுக்கு ஓட்டு போட்ட ஆதிதிராவிடர்கள், அருந்ததியர்கள்,  முத்தரையர்கள் , பிராமணர்களின் ஓட்டுகள் இனி அதிமுகவுக்கு கிடைக்காத நிலை இருக்கிறது . பன்னீர்செல்வம், பழனிச்சாமி,சசிகலா, தினகரன் ஆகியோர் பிரிந்து நிற்பதால் இந்த பாதிப்பு ஏற்படும் என்று தெரிகிறது.   இதை கருத்தில் கொண்டு தான் கூட்டணி குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார் அண்ணாமலை. 

 அதிமுக எப்படி திமுக எதிர்ப்பு அரசியலை வைத்து 30 ஆண்டுகள் ஆட்சி செய்ததோ,  அதே மாதிரி இப்போது திமுகவுக்கு எதிர்ப்பு அரசியல் செய்வது பாஜகதான் என்ற நிலை இருக்கிறது.  இது இப்படியே சென்றால் பாஜகவுக்கு வெற்றி தான் என்று எடுத்துச்சொல்லி புரிய வைத்திருக்கிறார் அண்ணாமலை என்கிறது தகவல்.