பெண்களை களமிறக்கும் அதிமுக?- இபிஎஸின் மாஸ்டர் பிளான்

 
eps

அதிமுகவை பொருத்தவரையில் மதுராந்தகம் தொகுதிக்கு முன்னாள் எம்.எல்.ஏ கனிதா சம்பத் அல்லது ராஜ்யசபா எம்.பி தனபாலின் மனைவி காயத்ரி ஆகியோருக்கு வாய்ப்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

அதிமுகவை பொருத்தவரையில் மதுராந்தகம் தொகுதிக்கு முன்னாள் எம்.எல்.ஏ கனிதா சம்பத் அல்லது ராஜ்யசபா எம்.பி தனபாலின் மனைவி காயத்ரி ஆகியோருக்கு வாய்ப்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து அதன்மூலம் வாக்குகளை பெறலாம் என அதிமுக பொதுச்செயலாளர் திட்டமிடுகிறார். அதே நேரத்தில் தாராபுரம் தொகுதியில் உள்ளூர் முக்கிய நிர்வாகிகளான பங்க் மகேஷ் அல்லது பானுமதி, சரோஜா யாரையாவது ஒருவரை நிறுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை போன்று அதிமுக இந்த தொகுதிகளில் நிச்சயம் எளிதாக வெற்றி பெற முடியாது. திமுக,  அதிமுக நேரடியாக போட்டியிடுவதால் ஆளும் கட்சியான தமிழக வெற்றி கழகத்துக்கே அதிக அளவில் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. திராவிட கட்சிகளின் வாக்குகள் பிரியும்போது ஆளுங்கட்சிகளுக்கு தான் அதிகம் வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். அந்த அடிப்படையில் இந்த இரு தொகுதிகளையும் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தமிழக வெற்றி கழகத்துக்கு தான் அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. 

இதனிடையே தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். அதிமுகவின் வெற்றிக்காக பாரதிய ஜனதா கட்சி பாடுபடும் என்றும் உறுதி அளித்துள்ளார்.