காங்கிரசுக்கு ஆதரவா? ஓபிஎஸ் அணி பரபரப்பு

 
o

ஓபிஎஸ் சம்மதித்தால் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தர தயார் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் புகழேந்தி.

 ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் மாநகராட்சி தனியார் உணவகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது .   அதிமுகவின் பொதுக்குழு செல்லாது என்று ஓபிஎஸ் அறிவித்திருப்பது மகிழ்ச்சியான செய்தி என்றார்.

p

அவர் மேலும் அதுகுறித்து,   ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடத்திய பின்னர்தான் பிற அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.  பொதுக்குழுவை கலைத்தது குறித்து நீதிமன்றம் சொல்லட்டும் என்றார்.

 அதிமுக ஆட்சியின் போது ஊழல்வாதிகள் என சொன்னவர் அமித்ஷா.   தமிழகத்தில் வருமான வரித்துறையினரின் ரெய்டு உள்ளிட்டவற்றை செய்து காட்டியவர் அமித்ஷா.  ஆனால் இன்றைக்கு ஊழல்வாதிகளாக குற்றம் சாட்டப்பட்டவர்களுடனே அமர்ந்து பேசி இருப்பது நியாயம்தானா என்ற கேள்வியை எழுப்பினார். 

a

 தொடர்ந்து பேசிய புகழேந்தி,   திருச்சியில் நடந்த மாநாடு என்பது தென் தமிழகத்தினர் மட்டுமே பங்கேற்ற பெருங்கூட்டம்.  சேலத்திலும் மாபெரும் மாநாட்டை நடத்திட ஓபிஎஸ் அவர்களை கேட்டுக்கொள்கிறேன் என்று வேண்டுகோள் விடுத்தவர்,   கர்நாடக சட்டமன்றத் தேர்தலை பொருத்தவரைக்கும் எங்களை காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா கட்சிகள் ஆதரவு கேட்டு வருகின்றன.   ஓபிஎஸ் மட்டும் சம்மதித்தால் காங்கிரஸ் கட்சிக்கும் அதிமுக ஆதரவு  வழங்க தயார் என்றார்.

புகழேந்தியின் இந்த பேச்சு அதிமுகவினர் மத்தியில் சலசலப்பையும்,  பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.