தினகரனுக்கு அதிமுக இணைப் பொதுச்செயலாளர் பதவி?
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி தரப்பு காய் நகர்த்தி வரும் நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை நேரில் சந்தித்து 'இணை பொதுச்செயலாளர்' பதவியை ஏற்க அழைப்பு விடுத்துள்ளனர்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி தரப்பு காய் நகர்த்தி வரும் நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை நேரில் சந்தித்து 'இணை பொதுச்செயலாளர்' பதவியை ஏற்க அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால், பெயரளவிலான பதவியாக இருக்கக் கூடாது என்றும், முக்கிய விவகாரங்களில் முழு முடிவு எடுக்கும் அதிகாரம் வேண்டும் என்றும் டிடிவி நிபந்தனை விதித்துள்ளார். இதனால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. அதிமுகவுடன் அமமுகவை இணைக்க டிடிவி தினகரன் சம்மதம் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடன் உள்ளவர்களுக்கும் முக்கிய பதவிகள் வழங்கும் அவர் அறிவுறுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடயே சசிகலாவை அதிமுக இணைப்பதற்கான பேச்சுவார்த்தையையும் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

