சசிகலா வந்து அதிமுகவை காப்பாத்துறாங்களா? அப்போ இத்தனை நாளா யாரு காப்பாத்துறா?- ஈபிஎஸ்

 
eps

அதிமுகவில் யாரும் சாதி பார்ப்பதில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

EPS
தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “இத்தனை நாட்கள் அதிமுகவை காப்பாற்றியது யார்?. 2021 ஆண்டு அரசியல் ஓய்வு எனக் கூறிய சசிகலா, இப்போது ஏன் வருகிறார்? தற்போது திடீரென மீண்டும் எண்ட்ரி என்றால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? கட்சியை காப்பாற்றுவேன் என சசிகலா கூறுவது, 3 ஆண்டுகள் வேலைக்கு செல்லாமல் திடீரென வேலைக்கு செல்வதுபோல் உள்ளது. 3 ஆண்டுகள் விடுமுறையில் சென்றிருந்தார். இப்போது ரீ-எண்ட்ரி கொடுக்கிறார். அதிமுகவில் ஒரு சாதி ஆதிக்கம் செலுத்துவதாக எப்படி சொல்கிறார் சசிகலா? அதிமுகவில் எல்லா சாதியினரும், அனைத்து பொறுப்புகளிலும் உள்ளனர். சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக.


அதிமுக ஆட்சியில் இயற்கை பேரிடர் காலங்களில் ஹெக்டேருக்கு ரூ.20,000 வழங்கப்பட்டது. குறுவை காப்பீடு திட்டத்தில் விவசாயிகளை திமுக அரசு சேர்க்கவில்லை, அதனால் விவசாயிகளுக்கு காப்பீடு கிடைக்கவில்லை. டெல்டா மாவட்டங்களில் விவசாய பிரச்னைகள் இருந்து வருகிறது. கடந்த ஒரு ஆண்டாக விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு முழுமையாக தண்ணீர் கிடைக்காத காரணத்தால் 3 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் காய்ந்து கருகி வீணாய் போயின” என்றார்.