“நிர்பந்தத்தால் பாஜகவுடன் கூட்டணி”- கண்ணீர்மல்க உரையாற்றிய அதிமுக நிர்வாகிகள்

 
ன்

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே களை கட்ட தொடங்கியுள்ளது. 

அதிமுக - பாஜக கூட்டணியை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பிற  கட்சிகள் எவ்வாறு பார்க்கின்றன? - BBC News தமிழ்

முதற்கட்டமாக கடந்த 2023-ஆம் ஆண்டு பிரிந்த அதிமுக- பாஜக கூட்டணி தற்போது மீண்டும் ஒன்றிணைந்துள்ளது. அதிமுகவும் பாஜகவும் இணைந்து, அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். அதேசமயம் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டின் உரிமைகளை அ.தி.மு.க ஒருபோதும் விட்டுக் கொடுக்காது எனவும் 2026 தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் எனவும் அறிக்கை வெளியிட்டிருந்தார். 

அதிமுக - பாஜக: கூட்டணி ஆட்சி பற்றி அமித் ஷா கூறியது என்ன? திமுக  குறிப்பிடும் 1980 தேர்தலில் என்ன நடந்தது? - BBC News தமிழ்

இந்நிலையில் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய முன்னாள் எம்எல்ஏ குணசேகரன், “பாஜகவுடன் கூட்டணி வைத்தது வருத்தமாக இருந்தாலும், இயக்கத்தை காப்பாற்ற வேண்டிய கடமை உள்ளது. இஸ்லாமியர்கள் வருத்தம் அடைய வேண்டாம், அதிமுக என்றும் உங்களுடன் துணை நிற்கும்” என்றார். அதேபோல் அதிமுக நிர்வாகி கண்ணப்பன், கட்சியை உடைக்க பார்க்கின்றனர், நிர்பந்தம் காரணமாக அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அந்த கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் கண்ணீர் மல்க பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.